திருகோணமலையில் ஆசிரியரால் மாணவிகளுக்கு நேர்ந்த அசம்பாவிதம்
திருகோணமலை சம்பூர் பொலிஸ் பிரிவில் இயங்கிய தனியார் மாலை நேர வகுப்பில் வைத்து மாணவிகள் இருவருக்கு ஆசிரியர் ஒருவர் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருகோணமலை சம்பூர் பொலிஸ் பிரிவில் இயங்கிய தனியார் மாலை நேர வகுப்பில் வைத்து மாணவிகள் இருவருக்கு ஆசிரியர் ஒருவர் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவத்தில் சம்பூர் பகுதியைச் சேர்ந்த 53 வயதுடைய ஆசிரியர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட சிறுமிகள் நேற்று மாலை சம்பூர் பொலிஸ் நிலையத்திற்கு சென்று முறைப்பாடு செய்ததற்கமைவாக உடனடியாக சந்தேக நபரான ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முறைப்பாடு செய்த இரண்டு மாணவிகளும் தரம் 11 இல் கல்வி பயிலுகின்றவர்கள் என்பதோடு இரண்டு மாணவிகளும் மூதூர் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட ஆசிரியர் சம்பூர் பொலிஸில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன் இன்று திங்கட்கிழமை மூதூர் நீதிவான் நீதிமன்றில் முன்னிலைபடுத்துவதற்கான ஏற்பாடுகளை சம்பூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.