25 வயது வீரருக்கு அடித்த அதிஷ்டம்... இந்திய அணியில் இருந்து முக்கிய வீரர் நீக்கம்?

டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் பும்ரா, முகமது சிராஜ் மற்றும் அர்ஷ்தீப் சிங் எனமூன்று வேகப் பந்துவீச்சாளர்கள் அறிவிக்கப்பட்டனர்.

25 வயது வீரருக்கு அடித்த அதிஷ்டம்... இந்திய அணியில் இருந்து முக்கிய வீரர் நீக்கம்?

இந்திய டி20 அணியில் இருந்து முகமது சிராஜ் நீக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் பும்ரா, முகமது சிராஜ் மற்றும் அர்ஷ்தீப் சிங் எனமூன்று வேகப் பந்துவீச்சாளர்கள் அறிவிக்கப்பட்டனர்.

இவர்களில் பும்ரா மற்றும் முகமது சிராஜ் மட்டுமே சர்வதேச அனுபவம் வாய்ந்த வீரர்களாக இருந்த நிலையில், அர்ஷ்தீப் சிங் 2023 மற்றும் 2024 ஐபிஎல் தொடர்களில் சிறப்பாக செயல்பட்டதால் அணியில் இணைக்கப்பட்டார்.

இந்த நிலையில் டி20 உலகக் கோப்பை தொடரின் குரூப் சுற்றில் அர்ஷ்தீப் சிங் அபாரமாக செயல்பட்ட போதும், முகமது சிராஜ் விக்கெட் வீழ்த்தவில்லை. 

இதையடுத்து  வெஸ்ட் இன்டீஸில் நடைபெற உள்ள சூப்பர் 8 சுற்றுப் போட்டிகளில் முகமது சிராஜுக்கு வாய்ப்பு கிடைக்காது என கூறப்படுகிறது. 

அங்குள்ள ஆடுகளங்கள் சுழற் பந்துவீச்சுக்கு சாதகமாக இருப்பதால், மூன்று வேகப் பந்துவீச்சாளர்களில் ஒருவரை நீக்கிவிட்டு, அவருக்கு பதிலாக சுழற் பந்துவீச்சாளர் குல்தீப் யாதவை அணியில் சேர்க்க ரோஹித் சமரா முடிவு செய்துள்ளார்.

எனவே, முகமது சிராஜை பிளேயிங் லெவனில் இருந்து நீக்க கேப்டன் ரோஹித் சர்மா முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது. 

நடப்பு உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியில் தலா ஏழு விக்கெட்களை  வீழ்த்தி அதிக விக்கெட் வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் 25 வயதான அர்ஷ்தீப் சிங் மற்றும் ஹர்திக் பாண்டியா முதல் இடத்தில் இருக்கின்றனர்.

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp