ரோகித் சர்மா செய்த மோசமான சாதனை.. இது என்னடா சோதனை!
டி20 உலக கோப்பை சூப்பர் 8 சுற்று பிரிவில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக போட்டியில் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா ஒரு சோகமான சாதனையை செய்து உள்ளார்.
டி20 உலக கோப்பை சூப்பர் 8 சுற்று பிரிவில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக போட்டியில் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா ஒரு சோகமான சாதனையை செய்து உள்ளார்.
ரோகித் சர்மா உலகக் கோப்பையில் பல்வேறு சாதனைகளை படைத்திருக்கிறார். இந்த சூழலில் ரோகித் சர்மாவுக்கு சோகமான சாதனையும் ஒன்று தற்போது அமைந்திருக்கிறது.
ரோகித் சர்மா நடப்பு உலக கோப்பை தொடரில் கூட, அயர்லாந்துக்கு எதிராக அரை சதம் அடித்தாலும், பாகிஸ்தானுக்கு எதிராக 13 ரன்கள், அமெரிக்காவுக்கு எதிராக மூன்று ரன்கள் அடித்திருந்தார்.
இந்த நிலையில், ஆப்கானிஸ்தானுக்கு எதிராக ரோகித் சர்மா வெறும் 8 ரன்களில் ஆட்டம் இழந்தார். இதன் மூலம் ஐசிசி தொடர்களில் அதிக முறை ஒற்றை இலக்கம் ரன்களில் ஆட்டம் இழந்த இந்திய வீரர் என்ற சோகமான சாதனையை தற்போது ரோகித் சர்மா செய்து உள்ளார்.
ஐசிசி தொடர்களில் இதுவரை 19 முறை ஒற்றை இலக்கம் ரன்களில் ரோகித் சர்மா ஆட்டம் இழந்திருக்கிறார். 17 முறை ஒற்றை இலக்கம் ரன்களில் ஆட்டம் இழந்த யுவராஜ் சிங் இரண்டாவது இடத்தில் இருக்கிறார்.
14 முறை ஒற்றை இலக்கம் ரன்களில் ஆட்டம் இழந்து விராட் கோலி மூன்றாவது இடத்தில் இருக்கிறார். தோனி 13 முறையும், சுரேஷ் ரெய்னா 13 முறையும்சச்சின் டெண்டுல்கர் 12 முறையும், ஜாகிர் கான் 12 முறையும் ஒற்றை இலக்கம் ரன்களில் ஆட்டம் இழந்திருக்கிறார்கள்.