139 ஆண்டு சாதனையை தகர்த்தார் பும்ரா.. அடுத்தடுத்து மாபெரும் ரொக்கார்ட்!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 200வது விக்கெட் வீழ்த்தியுள்ள பும்ரா தற்போது ஆஸ்திரேலியா மண்ணில் புதிய சாதனை ஒன்றையும் படைத்திருக்கிறார்.
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 200வது விக்கெட் வீழ்த்தியுள்ள பும்ரா தற்போது ஆஸ்திரேலியா மண்ணில் புதிய சாதனை ஒன்றையும் படைத்திருக்கிறார்.
ஆஸ்திரேலிய ஆடுகளத்தில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாத நிலையில் பும்ரா மட்டும் அபாரமாக செயல்பட்டு வருகிறார். நடப்பு தொடரில் பும்ரா 29 விக்கெட்டுகளை இதுவரை வீழ்த்தி இருக்கிறார்.
அத்துடன், இன்று புதிய சாதனை ஒன்றையும் படைத்திருக்கிறார் பும்ரா. அதாவது, உலகின் இரண்டாவது மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் தான் முதல் சர்வதேச டெஸ்ட் போட்டி நடைபெற்றது.
பழம்பெரும் வரலாறு கொண்டுள்ள இந்த கிரிக்கெட் மைதானத்தில் 90,000 மேற்பட்ட பார்வையாளர்கள் அமர்ந்து பார்க்க முடியும். இப்படி புகழ்பெற்ற இந்த மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வெளிநாட்டு பவுலர்கள் பட்டியலில் பும்ரா 139 ஆண்டுகால சாதனையை முறியடித்து இருக்கிறார்.
1881 முதல் 1885 ஆம் ஆண்டு வரை மெல்போர்னில் விளையாடிய இங்கிலாந்து வீரர் வில்லியம் பேட்ஸ், மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் 6 போட்டிகளில் விளையாடி 22 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார்.
தற்போது பும்ரா 139 ஆண்டுகள் பிறகு மெல்போர்ன் மைதானத்தில் மூன்று போட்டிகளில் விளையாடி 23 விக்கட்டுகளை கைப்பற்றி அந்த சாதனையை உடைத்திருக்கிறார்.
மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வெளிநாட்டு வீரர் என்றால் அது இங்கிலாந்தை சேர்ந்த பர்னிஸ்தான். அவர் மெல்போர்ன் மைதானத்தில் 1902 முதல் 1912 ஆம் ஆண்டு வரை விளையாடி 5 டெஸ்டுகளில் 35 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளமை குறிப்பிடத்தக்கது.