ஊடக அறம், உண்மையின் நிறம்!

ஆஸ்திரேலியாவின் நம்பிக்கையை உடைத்த இந்திய வீரர்களின் தரமான சம்பவம்!

அதிரடியால் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இந்தியா

INDvsAUS : இந்தியா – ஆஸ்திரேலியா மோதிய 2019 உலகக்கிண்ண தொடரின் லீக் போட்டியில் இந்தியா 36 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஆஸ்திரேலிய அணி உலகக்கிண்ண தொடருக்கு முன் இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரைக் கைப்பற்றி இருந்ததால் இரண்டு அணிகளுக்கும் இடையே கடும் போட்டியுடன் இந்தப் போட்டிக்கான எதிர்பார்ப்பு பலமடங்கு அதிகமாக இருந்தது.

இந்தியா, 2003 உலகக்கிண்ண தொடரில் ஆஸ்திரேலிய அணியிடம் இறுதிப் போட்டியில் அடைந்த தோல்விக்கு மீண்டும் ஒரு உலகக்கிண்ண தோல்வியை அந்த அணிக்கு பரிசளித்து, பழி தீர்த்துக் கொண்டது.

IND Vs AUS | World Cup 2019 | Live Scores and Commentary | Match Highlights |India vs Australia | Cricket |London |Highlights

நாணயசுழற்சியில் வென்ற இந்திய அணி துடுப்பாட்டம் தேர்வு செய்தது. நாணயசுழற்சி வெற்றியை சரியாக பயன்படுத்திக் கொண்ட இந்தியா, பேட்டிங்கில் பிரித்து மேய்ந்தது. எந்த இடத்திலும் இந்தியாவின் துடுப்பாட்டம் சறுக்கவே இல்லை.

ஆரம்ப வீரர்கள் ரோஹித் சர்மா நிதானமாக ஆடினாலும், 57 ஓட்டங்கள் குவித்தார். தவான் தன் இயல்பான ஆட்டத்தை ஆடி 117 ஓட்டங்கள் குவித்து, ஐசிசி நடத்தும் தொடர்களில் நான் தான் ராஜா என காட்டினார்.

அடுத்து விராட் கோலி 82 ஓட்டங்கள் எடுத்து மிரட்டினார். ஹர்திக் பண்டியா நான்காம் இடத்தில் பேட்டிங் இறங்கி ஆச்சரியம் அளித்தார். அதைவிட 27 பந்துகளில் 48 ஓட்டங்கள் எடுத்து எல்லோருக்கும் ஆச்சரியம் அளித்தார். தான் பொறுப்பான துடுப்பாட்ட வீரர் என நிரூபித்துக் காட்டினார்.

IND Vs AUS | World Cup 2019 | Live Scores and Commentary | Match Highlights |India vs Australia | Cricket |London |Highlights

தோனி கடைசி ஐந்து ஓவர்களில் களமிறங்கி அதிரடி ஆட்டம் ஆடினார். 14 பந்துகளில் 27 ஓட்டங்கள் குவித்தார். ராகுல் 3 பந்துகளில் 11 ஓட்டங்கள் எடுத்து தன்னால் முடிந்த உதவியை செய்தார். இந்தியா 5௦ ஓவர்களில் 352 ஓட்டங்கள் குவித்தது.

இந்தப் போட்டி நடைபெற்ற ஓவல் மைதானத்தில் 300+ ஓட்டங்கள் “தண்ணி பட்ட பாடு” என்பதால் இந்தியா பந்துவீச்சில் கவனமாக இருக்க வேண்டும் என்ற நிலை இருந்தது. அதற்கேற்ப, ஆஸ்திரேலிய அணி சிறப்பான ஆரம்பம் பெற்றது.

பந்துவீசியவரின் மண்டையை பொளந்த டேவிட் வார்னர்.. ஏன்… என்ன நடந்தது?

சற்று நிதானமாக ரன் சேர்த்தாலும், 13 ஓவர்கள் வரை விக்கெட் இழக்காமல் 60 ஓட்டங்கள் சேர்த்தனர் ஆரோன் பின்ச் – டேவிட் வார்னர். இந்திய பந்துவீச்சாளர்களால் விக்கெட் எடுக்க முடியாத அளவு கவனமாக ஆடினர்.

ஆனால், ரன் ஓடுவதில் இருவரும் சொதப்பினர். அந்த வாய்ப்பை பயன்படுத்திய ஜாதவ், பண்டியா இணைந்து பின்ச்சை ரன் அவுட் செய்தனர். அவர் 36 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து வார்னர் – ஸ்மித் கூட்டணி அமைத்தனர். ஆனால், இவர்களும் நிதானமாக ரன் சேர்க்க ரன் ரேட் அழுத்தத்தில் ஆழ்ந்தது ஆஸ்திரேலியா.

வார்னரை சாஹல் 56 ஓட்டங்களில் வெளியேற்ற, அடுத்து வந்த கவாஜா 42 ஓட்டங்கள் சேர்த்து பும்ரா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதன் பின் ஆஸ்திரேலியா ஆட்டம் கண்டது. ஸ்மித் 69, ஸ்டாய்னிஸ் 0, மேக்ஸ்வெல் 28 என அடுத்தடுத்து விக்கெட்களை இழந்தது ஆஸ்திரேலியா.

ஆஸ்திரேலியா சரியாக கடைசி பந்தில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 316 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தது. இந்தியா 36 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 4 புள்ளிகளுடன் உலகக்கிண்ண லீக் சுற்றில் வெற்றிகரமான அணியாக இந்தியா கால் பதித்துள்ளது.