கம்பீரை கடுமையாக பேசிய கவாஸ்கர்... ரோஹித் சர்மா தான் காரணம்!

இங்கிலாந்து அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் மைக்கேல் வாகன், இந்தியாவும் தற்போது இங்கிலாந்தை பார்த்து பேஸ் பால் கிரிக்கெட்டை விளையாடுகிறது என்று கூறியிருந்தார்.

கம்பீரை கடுமையாக பேசிய கவாஸ்கர்... ரோஹித் சர்மா தான் காரணம்!

இந்திய அணி, அண்மையில் இடம்பெற்ற வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இரண்டுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் வென்றது. இரண்டாவது டெஸ்டில் இரண்டரை நாட்கள் மழையால் பாதிக்கப்பட்ட நிலையில் இந்திய அணி தங்களுடைய முதல் இன்னிங்ஸில் அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தது.

இதனை பலரும் பாராட்டி வரும் நிலையில் இங்கிலாந்து அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் மைக்கேல் வாகன், இந்தியாவும் தற்போது இங்கிலாந்தை பார்த்து பேஸ் பால் கிரிக்கெட்டை விளையாடுகிறது என்று கூறியிருந்தார்.

இந்த சூழலில்கவாஸ்கர் எழுதிய கட்டுரையொன்றில் கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்தி உள்ளார். யாராவது புதுமையாக விளையாடினாலோ வழக்கமான பாணியில் இருந்து விலகி சென்றாலோ அதற்கு புது பெயர் வழங்குவது வழக்கமாகிவிட்டது.

முன்பெல்லாம் ஏதேனும் ஊழல் நடந்தால் கேட் என்ற வார்த்தையை பயன்படுத்தி எழுதுவார்கள். தற்போது இந்தியா விளையாடும் விதத்தை பார்த்து பேஸ்பால் என்று கூறுகிறார்கள். கம்பீர் பயிற்சியாளராக வந்ததை அடுத்து, இந்திய ஊடகங்கள் கம்பால் என்று கூறுகிறார்கள். 

இங்கிலாந்து அணி டெஸ்ட் கிரிக்கெட்டில் பென் ஸ்டோக்ஸ் மற்றும் மெக்குல்லம் தலைமையில் தான் அதிரடியாக விளையாடியது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. 

ஆனால் இந்தியா  தற்போது தான் அதிரடியாக விளையாடுவது போல் பலரும் கூறி வருவது ஆச்சரியத்தை தருகிறது. ஏனென்றால் ரோகித் சர்மா கேப்டனாக பதவி ஏற்றதிலிருந்து இந்திய அணி இப்படித்தான் விளையாடி வருகிறது.

கம்பீர் இந்திய அணியின் பயிற்சியாளராக பதவியேற்று வெறும் இரண்டு மாதங்கள் தான் ஆகிறது. எனவே இந்தியா இப்படி அதிரடியாக விளையாடுவதற்கு கம்பீரை பாராட்டுவது பிழையானதாகும். கம்பீர் கிரிக்கெட் விளையாடிய காலத்தில் கூட இப்படி அதிரடியாக விளையாடியது கிடையாது. 

இந்திய அணியின் இந்த அதிரடி மாற்றத்திற்கு முழுக்க முழுக்க ரோஹித் சர்மா தான் காரணம் என்று கவாஸ்கர் கடுமையான வார்த்தையை பயன்படுத்தி சாடி இருக்கிறார்.

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp