சீண்டிய பங்களாதேஷ் வீரர்கள்... கதையை முடித்த இளம் இந்திய அணி.. அதிரடி வெற்றி!
19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான உலகக்கோப்பை தொடர்பில் பங்களாதேஷ் அணியை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான உலகக்கோப்பை தொடர்பில் பங்களாதேஷ் அணியை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றது.
இந்திய அணி, பங்களாதேஷ் அணியை 84 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி குரூப் ஏ பிரிவில் தங்களின் முதல் போட்டியில் வெற்றியுடன் உலகக்கோப்பையை துவங்கி இருக்கிறது.
உதய் சாகரன் கேப்டன்சியில் களமிறங்கிய இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. துவக்க வீரர் அர்ஷின் குல்கர்னி 7 ரன்களும், மூன்றாம் வரிசை பேட்ஸ்மேன் முஷீர் கான் 3 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
துவக்க வீரர் ஆதர்ஷ் சிங் மற்றும் நான்காம் வரிசையில் இறங்கிய உதய் சாகரன் இணைந்து 116 ரன்களுக்கு கூட்டணி அமைத்தனர்.
அப்போது அவர்களின் விக்கெட்டை எடுக்க முடியாத பங்களாதேஷ் வீரர்கள் கேப்டப் உதய் சாகரனை சீண்டினர்.
ஆசிய கோப்பை வெற்றியின் மிதப்பில் இருந்த பங்களாதேஷ் வீரர்களை பின்னர் அம்பயர் தடுத்து அனுப்பினார்.
ஆதர்ஷ் சிங் 76 ரன்கள், உதய் சாகரன் 64 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தனர். பின்னர் வந்த ப்ரியான்ஷு 23, ஆரவல்லி ஆவனிஷ் 23, சச்சின் தாஸ் 26 ரன்கள் சேர்க்க, இந்திய அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 251 ரன்கள் குவித்தது.
சேஸிங் செய்ய வந்த பங்களாதேஷ் அணியின் அனைத்து பேட்ஸ்மேன்களும் டெஸ்ட் போட்டியை விட மோசமாக பந்துகளை வீணடித்துக் கொண்டிருந்தனர்.
அதிகபட்சமாக முகமது ஷிபாப் ஜேம்ஸ் 77 பந்துகளில் 54 ரன்களும், ஆரிஃபுல் இஸ்லாம் 71 பந்துகளில் 41 ரன்களும் சேர்த்தனர். மற்ற வீரர்கள் ஒருவர் கூட 20 ரன்களை தாண்டவில்லை.
இந்திய அணியின் பந்துவீச்சால் நிதான ஆட்டம் ஆடிய பங்களாதேஷ் விக்கெட்களையும் இழந்து 45.5 ஓவர்களில் 167 ரன்களுக்கு ஆல் - அவுட் ஆனது.