நினைத்துக் கூடப் பார்க்க முடியாது... உச்சகட்ட ஃபார்மில் இந்திய அணி செய்த சாதனை.. ரசிகர்கள் கொண்டாட்டம்!

ஆர்சிபி அணி 33 முறையுடன் நான்காவது இடத்தில் உள்ளதுடன், மற்றொரு இங்கிலாந்து கவுன்டி அணியான யார்க்ஷயர் 31 முறையுடன் ஐந்தாவது இடத்தில் உள்ளது.

நினைத்துக் கூடப் பார்க்க முடியாது... உச்சகட்ட ஃபார்மில் இந்திய அணி செய்த சாதனை.. ரசிகர்கள் கொண்டாட்டம்!

வங்கதேச அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணி 297 ரன்கள் எடுத்ததுடன், 37 வது தடவையான 200க்கும் அதிகமான டி20 ஸ்கோரை இந்திய அணி பெற்று உள்ளது.

இதன் மூலம் உலகிலேயே ஆண்கள் டி20 கிரிக்கெட்டில் அதிக முறை 200க்கும் அதிகமான ரன்கள் குவித்த அணி என்ற இமாலய சாதனையை இந்திய அணி செய்துள்ளது. 

இது சர்வதேச, உள்ளூர் டி20 கிரிக்கெட், ஐபிஎல் போன்ற டி20 லீக் அணிகள் என அனைத்து அணிகளும் எடுத்த 200+ ஸ்கோர்களை சேர்த்து பார்க்கும் போதும் இந்திய அணி முதல் இடத்தில் உள்ளது.

இங்கிலாந்து கவுன்டி அணியான சமர்செட் 36 முறை 200க்கும் அதிகமான ரன்கள் எடுத்து இரண்டாவது இடத்தில் உள்ளதுடன்,  35 முறை 200க்கும் அதிகமான ஸ்கோர்களுடன் சிஎஸ்கே மூன்றாவது இடத்தில் உள்ளது. 

ஆர்சிபி அணி 33 முறையுடன் நான்காவது இடத்தில் உள்ளதுடன், மற்றொரு இங்கிலாந்து கவுன்டி அணியான யார்க்ஷயர் 31 முறையுடன் ஐந்தாவது இடத்தில் உள்ளது.

ஆஸ்திரேலியா 23 முறை மட்டுமே 200க்கும் அதிகமான டி20 ஸ்கோரை எடுத்துள்ளதுடன், அந்த வகையில் ஆஸ்திரேலியா அணியால் இந்தியாவின் 37 முறை 200க்கும் அதிகமான ஸ்கோரை எட்டிய சாதனையை முறியடிப்பது என்பது மிகவும் கடினமான ஒன்றாகவே பார்க்கப்படுகின்றது.

இந்திய அணி தற்போது உச்சகட்ட ஃபார்மில் இருப்பதால் அடுத்து ஆடும் டி20 போட்டிகளில் மேலும் 200க்கும் அதிகமான ஸ்கோர்களை எடுக்கும் இதனால்,  ஆஸ்திரேலியாவால் அந்த சாதனையை துரத்திப் பிடிப்பது என்பது கடினமான ஒன்றாகவே இருக்கம்.

இந்த நிலையில் சர்வதேச டி20 கிரிக்கெட்டின் சிறந்த அணியாக இந்தியா உருவெடுத்து உள்ளதுடன், ஒரே ஆண்டில் அதிக முறை 200க்கும் அதிகமான ஸ்கோர்கள் எடுத்த அணியாகவும் இந்தியா காணப்படுகின்றது.

2023ல் இந்திய அணி ஏழு முறை 200க்கும் அதிகமான ஸ்கோர்களை எடுத்த நிலையில், நடப்பு ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் ஆறு முறை எடுத்துள்ளது.

இதேவேளை, தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக நான்கு டி20 போட்டிகளில் இந்திய அணி விளையாட உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp