டெஸ்ட் அணியிலும் ஜடேஜாவை கழட்டி விட முடிவு? கவுதம் கம்பீர் போட்ட மாஸ்டர் பிளான்!
தற்போது வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஜடேஜா இடம் பெற்று உள்ள போதும், அவருக்கு பிளேயிங் லெவனில் இடம் அளிக்கப்படுமா? என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ரவீந்திர ஜடேஜாவுக்கு பதிலாக மற்றொரு சுழற் பந்துவீச்சாளரான குல்தீப் யாதவுக்கு பயிற்சியாளர் கவுதம் கம்பீர் வாய்ப்பு அளிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்திய அணியின் குல்தீப் யாதவை ஆல் ரவுண்டராக மாற்றும் முயற்சியில் இந்திய அணி நிர்வாகம் இறங்கி உள்ளதுடன், ரவீந்திர ஜடேஜாவை கவுதம் கம்பீர் இந்திய அணியில் இருந்து விலக்கி வைத்து இருப்பதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
2024 டி20 உலகக் கோப்பை தொடரில் விளையாடிய ரவீந்திர ஜடேஜாவுக்கு இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் வாய்ப்பு அளிக்கப்படவில்லை.
ஐபிஎல் மற்றும் டி20 உலகக் கோப்பை என பெரிய தொடர்களில் தொடர்ந்து விளையாடி வருவதால் அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டு இருப்பதாக அப்போது கூறப்பட்டது.
இலங்கை தொடரில் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோருக்கு கூட ஓய்வு அளிக்கப்படவில்லை ஆனால், ரவீந்திர ஜடேஜாவுக்கு அவர் கேட்காமலேயே ஓய்வு அளிக்கப்பட்டது.
தற்போது வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஜடேஜா இடம் பெற்று உள்ள போதும், அவருக்கு பிளேயிங் லெவனில் இடம் அளிக்கப்படுமா? என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
இதேவேளை, இளம் வீரர்களை கொண்ட இந்திய அணியை தயார் செய்ய வேண்டும் என்பதில் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் உறுதியாக உள்ளதால், அஸ்வின், ரவீந்திர ஜடேஜா ஆகியோருக்கு படிப்படியாக வாய்ப்புகள் குறையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
துவக்க வீரர் ஜெய்ஸ்வால் பந்துவீச்சு பயிற்சியில் ஈடுபட்டுள்ளதால், அதன் மூலம் அவரை மூன்றாவது ஸ்பின்னராக பயன்படுத்த இந்திய அணி திட்டமிட்டு இருக்கிறது.
இந்த நிலையில், சென்னையில் நடைபெற உள்ள முதல் டெஸ்ட்டில் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு நிச்சயம் வாய்ப்பு அளிக்கப்படும். ஏனெனில், சென்னை அவரது சொந்த ஊர் என்பதாலும், சேப்பாக்கம் மைதானத்தில் அவர் அதிக அனுபவம் கொண்டவர் என்பதாலும் அவரை பிளேயிங் லெவனில் சேர்க்க வேண்டிய நிலை உள்ளது.
அத்துடன், முதல் டெஸ்ட் போட்டிக்கான பிட்ச் வேகப் பந்துவீச்சுக்கு சாதகமாக உள்ளதால், இந்திய அணி சுழற் பந்துவீச்சாளர்களை காட்டிலும் வேகப் பந்துவீச்சாளர்களுக்கே அதிக முக்கியத்துவம் அளிக்கும் என கூறப்படுகின்றது.
எனவே, சென்னை டெஸ்ட்டில் பும்ரா, முகமது சிராஜ் மற்றும் யாஷ் தயாள் ஆகியோர் வேகப் பந்துவீச்சாளர்களாகவும், அஸ்வின் மற்றும் குல்தீப் யாதவ் சுழற் பந்துவீச்சாளர்களாக இடம் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.