இளம் வீரரருக்கு வாய்ப்பு... விராட் கோலிக்கு கடும் சிக்கல்... ரோஹித்துக்கு ஏற்பட்டுள்ள சவால்

இந்திய அணி மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்று ஆறு புள்ளிகள் உடன் குரூப் ஏ வில் முதல் இடத்தில் உள்ளதுடன், சூப்பர் 8 சுற்றுக்கு சென்று விட்டது.

இளம் வீரரருக்கு வாய்ப்பு... விராட் கோலிக்கு கடும் சிக்கல்... ரோஹித்துக்கு ஏற்பட்டுள்ள சவால்

குரூப் ஏ பிரிவில் இந்தியா மற்றும் கனடா அணிகளுக்கு இடையேயான போட்டி இன்று நடைபெற உள்ளது. இந்திய அணி மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்று ஆறு புள்ளிகள் உடன் குரூப் ஏ வில் முதல் இடத்தில் உள்ளதுடன், சூப்பர் 8 சுற்றுக்கு சென்று விட்டது.

இதனால், கனடா அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணியில் சில மாற்றங்களை செய்ய வாய்ப்பு உள்ளது. சுழற் பந்துவீச்சுக்கு சாதகமான வெஸ்ட் இண்டீஸ்-இல் சூப்பர் 8 சுற்று போட்டிகள் நடைபெறுவதால் மேலதிகமாக ஒரு சுழற் பந்துவீச்சாளர் அணியில் சேர்க்கப்படலாம்.

இதேவேளை, விராட் கோலியின் மோசமான விளையாட்டு இந்திய அணிக்கு கவலை அளிக்கும் வகையில் உள்ளதுடன், அவர் மூன்று போட்டிகளிலும் ஐந்து ரன்கள் மட்டுமே சேர்த்து உள்ளார்.

இதை அடுத்து அவர் மீண்டும் மூன்றாம் வரிசையில் பேட்டிங் செய்ய வேண்டும் எனவும் முன்னாள் வீரர்கள் யோசனை கூறியுள்ளனர். அப்படி விராட் கோலி மூன்றாம் வரிசைக்கு சென்றால் துவக்க வீரராக ஜெய்ஸ்வால் அணியில் சேர்க்கப்பட வேண்டும். 

அவரை சேர்த்தால் சிவம் துபே-வைத்தான் நீக்க வேண்டிய நிலை ஏற்படுவதுடன், இந்த மாற்றத்தை செய்தால் அணியின் சமநிலை பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. எனவே கோலி தொடர்ந்து ஆரம்ப வீரராகவே களமிறங்குவார் என கூறப்படுகின்றது.

பந்து வீச்சில் முகமது சிராஜ் நீக்கப்பட்டு சுழற் பந்துவீச்சாளரராக குல்தீப் யாதவ் சேர்க்கப்பட வாய்ப்பு உள்ளது. இதைத் தவிர அணியில் பெரிய மாற்றம் எதுவும் இருக்காது. 

கனடா அணியைப் பொறுத்தவரை அயர்லாந்து அணியை மட்டுமே வீழ்த்தி இருந்தது கனடா. பாகிஸ்தான் மற்றும் அமெரிக்காவிடம் தோல்வி அடைந்து அந்த அணி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்துவிட்டது.

விராட் கோலியின் வரலாற்று சரிவு... ரசிகர்களால் வந்த வினை.. பிசிசிஐ எடுத்த மோசமான முடிவு?

எனினும், குரூப் ஏ பிரிவில் அதிக ஸ்கோர்களை அடித்த அணியாக கனடா உள்ளதால் இந்திய அணி கவனமாக விளையாட வேண்டும். 

இந்தியா - கனடா போட்டி நடைபெற உள்ள ஃப்ளோரிடாவில் கடுமையாக மழை பெய்து வருவதால் இந்த போட்டி முழுமையாக நடைபெறுமா? என்ற சந்தேகம் காணப்படுகின்றது.

இந்திய உத்தேச அணி விவரம்

ரோஹித் சர்மா, விராட் கோலி, ரிஷப் பண்ட், சூர்யகுமார் யாதவ், சிவம் துபே, ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், ஜஸ்பிரித் பும்ரா, அர்ஷ்தீப் சிங், முகமது சிராஜ் அல்லது குல்தீப் யாதவ்

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp