399 ரன்கள் தேவை... இங்கிலாந்தால் துரத்த முடியுமா? இதுவரை சேஸ் செய்யப்பட்ட பெரிய இலக்கு என்ன தெரியுமா?

முதல் இன்னிங்ஸில் இரட்டை சதம் அடித்த ஜெய்ஷ்வால் 17 ரன்களுக்கு ஆட்டமிழக்க, கேப்டன் ரோஹித் ஷர்மாவும் 13 ரன்களைதான் எடுத்தார். 

399 ரன்கள் தேவை... இங்கிலாந்தால் துரத்த முடியுமா? இதுவரை சேஸ் செய்யப்பட்ட பெரிய இலக்கு என்ன தெரியுமா?

இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து அணி கடும் பின்னடைவை சந்தித்து வருகிறது. இரண்டாவது இன்னிங்ஸில் ஷுப்மன் கில் 104 ரன்களை அடித்ததால், இந்தியாவால் 255 ரன்களை எட்ட முடிந்து, இங்கிலாந்துக்கு 399 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்துள்ளனர்.

இரண்டாவது இன்னிங்ஸில், ஷுப்மன் கில் 147 பந்துகளை எதிர்கொண்டு 11 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் உட்பட 104 ரன்களை குவித்தார். அடுத்து, அக்சர் படேலும் 45 (84) அரை சதத்தை நெருங்கி ஆட்டமிழக்க, கடைசி கட்டத்தில், அஸ்வின் 29 (61) ரன்களை அடித்தார். 

முதல் இன்னிங்ஸில் இரட்டை சதம் அடித்த ஜெய்ஷ்வால் 17 ரன்களுக்கு ஆட்டமிழக்க, கேப்டன் ரோஹித் ஷர்மாவும் 13 ரன்களைதான் எடுத்தார். 

மேலும், ஷ்ரேயஸ் ஐயர் 29 (52), ராஜத் படிதர் 9 (19), ஶ்ரீகர் பரத் 6 (28) ஆகியோரும் சொதப்பியதால், இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 255/10 ரன்களை சேர்த்து, 398 ரன்கள் முன்னிலை பெற்றது.

இந்திய பிட்சில், 2022-ல் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 378 ரன்களை சேஸ் செய்தது. இதுதான், மிகப்பெரிய சேஸாக இருக்கிறது. 

இங்கிலாந்து அணி, தனது கிரிக்கெட் வரலாற்றில், மூன்றுமுறை மட்டுமே 400+ இலக்கை சேஸ் செய்திருக்கிறது. கடைசியாக 1977ஆம் ஆண்டில்தான், 400+ இலக்கை சேஸ் செய்துள்ளது.

இங்கிலாந்து அணி பேஸ் பால் ஆட்டத்தை கையில் எடுத்தாலும், இப்போட்டியில் வெல்வது என்பது மேற்கே சூரியன் உதிப்பதற்கு சமம்தான். இங்கிலாந்து அணி 399 ரன்கள் இலக்கை சேஸ் செய்து களமிறங்கியபோது, முதல் ஓவரிலேயே லோ பவுன்ஸ் அதிகம் இருந்தது. 

இதனை கணித்து விளையாடுவது சுலபம் கிடையாது. ஆகையால், இங்கிலாந்து அணி 250 ரன்களை அடித்தாலே, அது பெரிய விஷயம்தான்.

399 ரன்கள் இலக்கை துரத்திக் களமிறங்கி இருக்கும் இங்கிலாந்து அணி, தற்போதுவரை 10/0 ரன்களை அடித்துள்ளது. ஜாக் கிரௌலி 2 (15), டக்கட் 8 (4) ஆகியோர் களத்தில் இருக்கிறார்கள்.

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp