இங்கிலாந்து அணிக்கு பாடம் எடுத்த இந்திய வீரர்கள்... 95 ரன்களில் 8 விக்கெட்!

இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக முகமது சிராஜ் 4 விக்கெட்டுகளையும், குல்தீப் யாதவ் மற்றும் ஜடேஜா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

இங்கிலாந்து அணிக்கு பாடம் எடுத்த இந்திய வீரர்கள்... 95 ரன்களில் 8 விக்கெட்!

இந்தியா இங்கிலாந்து இடையேயான ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் மூன்றாவது போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 445 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 

இந்திய அணியில் அதிகபட்சமாக ரோஹித் சர்மா 131 ரன்களும், ரவீந்திர ஜடேஜா 112 ரன்களும் எடுத்தனர். முதல் இன்னிங்ஸை துவங்கிய இங்கிலாந்து அணிக்கு, அந்த அணியின் ஒரு துவக்க வீரரான பென் டக்கட் அதிரடி பேட்டிங்கை வெளிப்படுத்தி 151 பந்துகளில் 153 ரன்கள் எடுத்து கொடுத்தார்.

அடுத்தடுத்து களமிறங்கிய வீரர்களில் ஓலி போப் 39 ரன்களும், பென் ஸ்டோக்ஸ் 41 ரன்களும் எடுத்து கொடுத்தாலும், மற்ற வீரர்கள் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு ரன் குவிக்காமல் வந்த வேகத்தில் விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறியதால் 95 ரன்கள் எடுப்பதற்குள் 8 விக்கெட்டுகளை பறிகொடுத்த இங்கிலாந்து அணி 319 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியுள்ளது.

பந்துவீச்சில் இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக முகமது சிராஜ் 4 விக்கெட்டுகளையும், குல்தீப் யாதவ் மற்றும் ஜடேஜா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp