இந்திய அணியில் மாற்று ஓபனர் இவர்தான்... முக்கிய வீரர் நீக்கம்? 2 வீரர்கள் கூடுதலாக சேர்ப்பு?
இரு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவது போட்டியில், அர்ஷ்தீப் சிங்கை நீக்கி முகமது ஷமியை இந்தியா சேர்த்தது.
இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி, 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று உள்ளதுடன், முதல் மூன்று போட்டிகளில் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இரு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவது போட்டியில், அர்ஷ்தீப் சிங்கை நீக்கி முகமது ஷமியை இந்தியா சேர்த்தது.
அர்ஷ்தீப் சிங், பவர் பிளேவில் தொடர்ந்து விக்கெட்களை வீழ்த்த கூடியவராக இருந்தார். ஆனால், மூன்றாவது போட்டியில் ஷமி ஒரு விக்கெட்டை கூட எடுக்கவில்லை. இதுவும் தோல்விக்கு முக்கிய காரணமாக பார்க்கப்பட்டது.
மேலும், சஞ்சு சாம்சனும் தொடர்ந்து படுமோசமாக சொதப்பி வருகிறார். முதல் மூன்று போட்டிகளிலும் சேர்த்து, 30 ரன்களைதான் சேர்த்தார்.
இதனால், சாம்சனை நீக்க வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி இருக்கிறது. இதனால், ஓபனர் இடத்தில் திலக் வர்மா களமிறங்க அதிக வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.
சஞ்சு சாம்சனை நீக்கிவிட்டால், ஒரு இடம் காலியாகிவிடும். அந்த இடத்திற்கு, மிடில் வரிசை பேட்டர் ஷிவம் துபே சேர்க்கப்படுவார். மேலும், துரூவ் ஜோரலின் பார்மும் சிறப்பாக இல்லை என்பதால், அவருக்கு மாற்றாக ரிங்கு சிங் விளையாட வைக்கப்படுவார் எனக் கருதப்படுகிறது.
ரிங்கு சிங்கிற்கு ஏற்பட்ட காயம், தற்போது சரியாகிவிட்டது. இதனால்தான், ரிங்கு சிங் மீண்டும் விளையாடுவது கிட்டதட்ட உறுதியாகிவிட்டது.
இந்திய அணியில் இருக்கும் கேப்டன் சூர்யகுமார் யாதவால், சமீப காலமாகவே அதிரடியாக விளையாட முடியவில்லை. மேலும், திலக் வர்மா, அக்சர் படேல் போன்றவர்கள் பேட்டிங்கில் தன்னை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது.
ரவி பிஷ்னோயும் முன்புபோல் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இதனால், கடைசி 2 டி20 போட்டிகளிலும் அபாரமாக செயல்படவில்லை என்றால், அவருக்கு அடுத்து இந்திய டி20 அணியில் இடம் கிடைக்காது எனக் கருதப்படுகிறது.
இந்திய உத்தேச 11 அணி
அபிஷேக் சர்மா, திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ், ஷிவம் துபே, ரிங்கு சிங், ஹர்திக் பாண்டியா, வாஷிங்டன் சுந்தர், அக்சர் படேல், ரவி பிஷ்னோய், முகமது ஷமி, வருண் சக்ரவர்த்தி.