ஒரேயொரு போட்டியில் இரண்டு மெகா சாதனைகளை படைக்க உள்ள ரோஹித் சர்மா... சாதிப்பாரா?

நடைபெறும் நான்காவது டெஸ்டில் இந்தியா வெற்றியைப் பெறும் பட்சத்தில், தொடரை 3-1 என்ற கணக்கில் கைப்பற்றிவிடும்.

ஒரேயொரு போட்டியில் இரண்டு மெகா சாதனைகளை படைக்க உள்ள ரோஹித் சர்மா... சாதிப்பாரா?

இங்கிலாந்து அணி உடனான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் இருக்கிறது. 

தற்போது நடைபெறும் நான்காவது டெஸ்டில் இந்தியா வெற்றியைப் பெறும் பட்சத்தில், தொடரை 3-1 என்ற கணக்கில் கைப்பற்றிவிடும்.

இந்த நிலையில், நான்காவது டெஸ்ட் போட்டியின் மூலம், இந்திய அணிக் கேப்டன் ரோஹித் சர்மா, 600 சிக்ஸர்கள் அடித்த முதல் வீரர் என்ற வரலாற்று சாதனையை படைக்க வாய்ப்பு காணப்படுகின்றது.

இதுவரை 470 சர்வதேச போட்டிகளில் விளையாடி உள்ள ரோஹித் சர்மா, 593 சிக்ஸர்களை அடித்து அதிக சிக்ஸர்கள் அடித்தோர் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறார்.

சர்வதேச கிரிக்கெட்டில் 17 வருடங்களாக விளையாடி வரும் ரோஹித் ஷர்மா, டெஸ்டில் 80 சிக்ஸர்களையும், ஒருநாள் கிரிக்கெட்டில் 323 சிக்ஸர்களையும், டி20 கிரிக்கெட்டில் 190 சிக்ஸர்களையும் அடித்துள்ளார்.

மகேந்திரசிங் தோனி டெஸ்ட் போட்டிகளில் 78 சிக்ஸர்களை அடித்த நிலையில், அதனை கடந்த டெஸ்டில்  ரோஹித் சர்மா தகர்த்தார். அத்துடன், ராஜ்கோன் டெஸ்டில், மூன்று சிக்ஸர்களை அடித்து டெஸ்டில் 80 சிக்ஸர்களை அடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைத்தார்.

ஜடேஜாவால் மூன்று வாய்ப்புகளை இழந்த இந்திய அணி... கடுப்பான ரோஹித் சர்மா... என்ன நடந்தது?

இந்த நிலையில், நான்காவது டெஸ்டின் மூலம், டெஸ்டில் 4000 ரன்களும், இங்கிலாந்துக்கு எதிராக 1000 ரன்களையும் அடிக்க ரோஹித் சர்மாவுக்கு வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது.

இதுவரை ரோஹித் சர்மா டெஸ்டில் 45.19 சராசரியுடன், 3977 ரன்களை அடித்துள்ளதுடன், இங்கிலாந்துக்கு எதிராக 47 சராசரியுடன் 987 டெஸ்ட் ரன்களை அடித்துள்ளார்.

நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள Colomboதமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


NEWS21
Colomboதமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
Colomboதமிழ் Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...