உலகில் எந்த பீல்டரும் செய்யாத சாதனை: வரலாறு படைத்த ரோஹித் சர்மா!

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையில், 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் கடைசி டெஸ்டில், ரோஹித் சர்மா சாதனை படைத்துள்ளார்.

 உலகில் எந்த பீல்டரும் செய்யாத சாதனை: வரலாறு படைத்த ரோஹித் சர்மா!

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையில், 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் கடைசி டெஸ்டில், ரோஹித் சர்மா சாதனை படைத்துள்ளார்.

 5ஆவது டெஸ்ட் போட்டியில், டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. 

இங்கிலாந்து அணி ஓபனர்கள் ஜாக் கிரோலி, பென் டக்கட் இருவரும் கடந்த 5 டெஸ்ட் போட்டிகளிலும் சிறந்த பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில், தற்போது 5ஆவது டெஸ்டிலும் சிறந்த பார்ட்னர்ஷிப்பை அமைத்து அசத்தினர்.

ஜாக் கிரோலி அபாரமாக செயல்பட்ட நிலையில், பென் டக்கட் (27), ஒல்லி போப் (11), ஜோ ரூட் (26), ஜானி பேர்ஸ்டோ (29), கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 0 (6) ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்து ஷாக் கொடுத்தனர்.

இங்கிலாந்து அணி, ஒரு கட்டத்தில் 137/2 என இருந்த நிலையில், அடுத்து தொடர்ந்து விக்கெட்கள் இழந்த காரணத்தினால், இங்கிலாந்து அணி 183/8 என்ற நிலையில், முதல் நாள் 2ஆவது செஷனில் 94/6 என இங்கிலாந்து கடும் பின்னடைவை சந்தித்து இருந்தது.

இந்திய அணியில், சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் தொடர்ந்து அபாரமாக பந்துவீசி 5 விக்கெட்களை கைப்பற்றி அசத்தினார். மேலும், ரவிச்சந்திரன் அஸ்வின் இரண்டு விக்கெட்களையும், ரவீந்திர ஜடேஜா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தி உள்ளனர்.

இப்போட்டியில், ரோஹித் சர்மா ஒரு கேட்சை பிடித்ததன் மூலம், டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என மூன்று பார்மெட்டிலும் தலா 60 கேட்ச்களை பிடித்த முதல் வீரர் என்ற வரலாற்று சாதனையை ரோஹித் படைத்துள்ளார்.

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp