இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் யாருக்கு வாய்ப்பு? இந்திய அணி பிளேயிங் லெவன் எப்படி?

இன்னும் ஒரு போட்டியில் தோல்வியடைந்தால் கூட இங்கிலாந்து அணி விமானம் ஏறி சொந்த ஊருக்கு செல்ல வேண்டிய நிலை வரும். 

இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் யாருக்கு வாய்ப்பு? இந்திய அணி பிளேயிங் லெவன் எப்படி?

இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி இன்று களமிறங்கவுள்ள நிலையில், இந்திய அணியின் பிளேயிங் லெவன் பற்றி பார்க்கலாம்.

நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணியை எதிர்த்து இந்திய அணி இன்று லக்னோ மைதானத்தில் களமிறங்கவுள்ளது. இந்த உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியை பொறுத்தவரை 5 போட்டிகளில் விளையாடி 5 இலும் வென்று புள்ளிப்பட்டியலில் முன்னிலையில் உள்ளது. 

ஆனால் மறுபக்கம் இங்கிலாந்து அணி 5 போட்டிகளிலும் விளையாடி 4 தோல்வி, ஒரு வெற்றி என்று தொடரில் இருந்து வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இன்னும் ஒரு போட்டியில் தோல்வியடைந்தால் கூட இங்கிலாந்து அணி விமானம் ஏறி சொந்த ஊருக்கு செல்ல வேண்டிய நிலை வரும். 

இதனால் கவுரவமான வெற்றியுடன் இங்கிலாந்து அணி புறப்படுவதற்கு கூட சில வெற்றிகள் தேவையாக உள்ளது. இந்த நிலையில் லக்னோ மைதானத்தை பொறுத்தவரை கொஞ்சம் ஸ்பின்னர்களுக்கு சாதகமாக இருக்கும் என்று பார்க்கப்படுகிறது.

இதனால் இந்திய அணியின் பிளேயிங் லெவன் எப்படி இருக்கும் என்ற விவாதம் கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வருகிறது. ஏனென்றால் இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா காயம் காரணமாக விலகி இருக்கிறார். 

இதனால் இந்திய அணி 3 ஸ்பின்னர்கள், 3 வேகப்பந்துவீச்சாளர்களுடன் களமிறங்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியை போல் 5 பவுலர்களுடன் களமிறங்கும் சூழலுக்கு இந்திய அணி தள்ளப்பட்டுள்ளது.

ஆடியே ஆகணும்..ரோஹித் எடுத்த முடிவு.. மெகா திட்டம் போட்டுள்ள இந்திய அணி!

இதனால் நம்பர் 8ல் முகமது ஷமி விளையாடுவாரா அல்லது ரவிச்சந்திரன் அஸ்வின் சேர்க்கப்படுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஒருவேளை அஸ்வின் சேர்க்கப்பட்டாலும், இந்திய அணி பும்ரா மற்றும் சிராஜ் என்று 2 வேகப்பந்துவீச்சாளர்களுடன் மட்டுமே இருக்கும்.

அதேபோல் கடந்த போட்டியில் முகமது ஷமி 5 விக்கெட்டுகளை வீழ்த்தி பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார். இதனால் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் மாற்றங்கள் இருக்க வாய்ப்பில்லை என்றே பார்க்கப்படுகிறது. 

ஆனால் கடந்த போட்டியை போல் ஜடேஜா அல்லது குல்தீப் யாதவ் இருவரில் ஒருவர் மீது அட்டாக் செய்யப்பட்டாலும், ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் சில ஓவர்கள் வீச வாய்ப்புள்ளது.

ஏனென்றால் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகிய இருவருமே கடந்த சில நாட்களாக லக்னோவில் பவுலிங் பயிற்சியில் ஈடுபய்ட்டு வருகின்றனர். 

இதனால் குல்தீப் யாதவ் மீதான அழுத்தம் அதிகரித்தால், நிச்சயம் டாப் ஆர்டர் வீரர்களில் ஒருவர் பவுலிங் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் மாற்றம் இருக்காது என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp