ஜோ ரூட்டுக்கு முதல்முறை.. இந்தியாவுக்கு திருப்புமுனை.. 2 பந்தில் ஆட்டத்தை மாற்றிய பும்ரா!

இதனால் 4 ஓவர்கள் முடிவிலேயே இங்கிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி 26 ரன்கள் சேர்த்திருந்தது. இந்த நிலையில் 5வது ஓவரை வீச பும்ரா வந்தார். அந்த ஓவரின் 3வது பந்திலும் மலான் பவுண்டரி விளாசினார். 

ஜோ ரூட்டுக்கு முதல்முறை.. இந்தியாவுக்கு திருப்புமுனை.. 2 பந்தில் ஆட்டத்தை மாற்றிய பும்ரா!

இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் டேவின் மலான் மற்றும் ஜோ ரூட் இருவரையும் அடுத்தடுத்த பந்துகளில் வீழ்த்தி நட்சத்திர வீரர் பும்ரா திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளார்.

உலகக்கோப்பை தொடரின் இன்றைய ஆட்டத்தில் இங்கிலாந்து அணியை எதிர்த்து இந்திய அணி விளையாடி வருகிறது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் ஜாஸ் பட்லர் பந்துவீச்சை தேர்வு செய்தார். 

இதனை தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 229 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக கேப்டன் ரோகித் சர்மா 87 ரன்கள் சேர்த்தார்.

இங்கிலாந்து அணி தரப்பில் டேவிட் வில்லி 3 விக்கெட்டுகளையும், அடில் ரஷீத் மற்றும் வோக்ஸ் இருவரும் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். எளிய இலக்கு என்பதால் நடப்பு சாம்பியனான இங்கிலாந்து அணி வெற்றிபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. 

அதேபோல் இந்திய அணி இந்த போட்டியில் வெல்ல வேண்டுமென்றால், பவர் பிளே ஓவர்களிலேயே விக்கெட் வீழ்த்த வேண்டும் என்று பார்க்கப்பட்டது.

இந்த நிலையில் இங்கிலாந்து அணி தரப்பில் டேவிட் மலான் - ஜானி பேர்ஸ்டோவ் கூட்டணி தொடக்கம் கொடுத்தது. இதில் ஜானி பேர்ஸ்டோவ் பவுண்டரி அடித்து ரன் கணக்கை தொடங்க, இன்னொரு பக்கம் டேவிட் மலான் சிக்ஸ் அடித்து ரன் கணக்கை தொடங்கினார். இதனால் லக்னோ மைதான ரசிகர்களின் கரகோஷம் மொத்தமாக அடங்கியது.

இதனால் 4 ஓவர்கள் முடிவிலேயே இங்கிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி 26 ரன்கள் சேர்த்திருந்தது. இந்த நிலையில் 5வது ஓவரை வீச பும்ரா வந்தார். அந்த ஓவரின் 3வது பந்திலும் மலான் பவுண்டரி விளாசினார். 

ஆனால் 5வது பந்தில் அவுட் ஆஃப் திசையில் பும்ரா பந்தை வீச, அதனை ஸ்கொயர் கட் அடிக்க முயன்ற மலான் இன்சைட் எட்ஜாகி போல்டானார். சிக்ஸ் அடிக்கும் போது அமைதியான லக்னோ மைதான ரசிகர்கள், அப்போது தான் உற்சாகத்தை ஆர்ப்பரித்தனர்.

அதன்பின் வந்த ஜோ ரூட் அபாயகரமான வீரராக பார்க்கப்பட்ட நிலையில், அடுத்த பந்திலேயே பும்ரா அவரையும் வீழ்த்தினார். அதுமட்டுமல்லாமல் உலகக்கோப்பை தொடரில் ஜோ ரூட் முதல்முறையாக டக் அவுட்டாகியுள்ளார். 

அடுத்தடுத்த பந்துகளில் பும்ரா விக்கெட் வீழ்த்தியதால் இங்கிலாந்து அணி 30 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதன் மூலம் ஆட்டத்தில் பும்ரா திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளார்.

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp