அணிக்கு திரும்புவாரா கோலி?.. இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் ஆடுவாரா? பயிற்சியாளர் வெளியிட்ட தகவல்!
5 போட்டிகள் கொண்ட இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் இருந்து விராட் கோலி விலகியதால், அவரது இடம் ராஜத் படிதருக்கு வழங்கப்பட்டது.
5 போட்டிகள் கொண்ட இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் இருந்து விராட் கோலி விலகியதால், அவரது இடம் ராஜத் படிதருக்கு வழங்கப்பட்டது.
ஆனால், விசாகப்பட்டினம் டெஸ்டில் அறிமுக வீரராக களமிறங்கிய அவர், அதில் 32, 9 ரன்களையும், அடுத்து ராஜ்கோட் டெஸ்டில் 5, 0 என சொற்ப ரன்களை மட்டும்தான் அடித்துள்ளார். இதனால், இவர் மீது அதிருப்தி ஏற்பட்டுள்ளது.
கோலி, கே.எல்.ராகுல், ஷ்ரேயஸ் ஐயர் ஆகியோர் இல்லாத காரணத்தினால், மீண்டும் ராஜத் படிதருக்கு தான், ராஞ்சி டெஸ்டிலும் வாய்ப்பு கிடைக்கும் எனக் கருதப்படுகிறது. இதில், அவர் சிறப்பாக ஆட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்.
ராஜத் படிதர் குறித்து பேசிய பேட்டிங் கோச் விக்ரம் ரத்தோர், ''இரண்டு போட்டிகளை வைத்து யாரைம் மதிப்பிட முடியாது. இப்படிப்பட்ட நிலைமை அனைவரும், நடக்கத்தான் செய்யும்.
2 போட்டிகளில் சொதப்பிவிட்டார் என்பதற்காக படிதரை ஓரங்கட்ட முடியாது. அவர் திறமையான வீரர். அதனால்தான், டெஸ்ட் அணியில் இடம்பெற்றுள்ளார்'' எனக் கூறினார்.
விராட் கோலி 5ஆவது டெஸ்டின் போது இந்திய அணியில் இணைவாரா என்ற கேள்விக்கு பதில் அளித்த விக்ரம் ரத்தோர், ''கோலி எப்போது அணிக்கு திரும்புவார் என்றை உறுதியாக கூற முடியாது. அவரிடம் இதுகுறித்து இன்னமும் பேசவில்லை. அவர் எப்போதுமே கிரிக்கெட்டை நேசிக்க கூடியவர்'' எனக் கூறினார்.
இந்திய அணி நான்காவது டெஸ்டில் தோற்றால் தொடர் 2-2 என்ற கணக்கில் சமன் அடையும். இதனால், கடைசி டெஸ்டில், கோலியை பிசிசிஐ அழைக்க வாய்ப்புள்ளது.
ஒருவேளை நான்காவது டெஸ்டில் இந்தியா வென்றால், கடைசி டெஸ்டில் தோத்தாலும், ஜெயிச்சாலும் பிரச்சினை இல்லை. அப்போது கோலி தேவைப்பட மாட்டார்.
கடைசியாக ராஞ்சியில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்டில் விளையாடியபோது, ரோஹித் சர்மா இரட்டை சதம் அடித்து அசத்தினார். இதனால், தற்போதும் ரோஹித் சர்மா மீது அதிக எதிர்பார்ப்பு இருக்கிறது.