அவரின் அருமை இப்போ புரியுதா.. இனியாவது முடிவை மாற்றுவாரா ரோகித் சர்மா?

இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொதப்பியதன் காரணமாக இந்திய அணியின் ஸ்கோர் வெறும் 229 ரன்கள் மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளது.

அவரின் அருமை இப்போ புரியுதா.. இனியாவது முடிவை மாற்றுவாரா ரோகித் சர்மா?

இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொதப்பியதன் காரணமாக இந்திய அணியின் ஸ்கோர் வெறும் 229 ரன்கள் மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளது.

உலகக்கோப்பை தொடரின் இன்றைய ஆட்டத்தில் இங்கிலாந்து அணியை எதிர்த்து இந்திய அணி விளையாடி வருகிறது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 229 ரன்கள் சேர்த்துள்ளது. 

டாப் ஆர்டர் வீரர்களான சுப்மன் கில் 13 ரன்களும், விராட் கோலி ரன் ஏதும் எடுக்காமலும், ஸ்ரேயாஸ் ஐயர் 4 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினர்.

இருப்பினும் கடைசி நேரத்தில் சூர்யகுமார் யாதவ் தனியாளாக போராடினார். கடைசி ஓவர் வரை சூர்யகுமார் யாதவ் ஆடியிருந்தால் இந்திய அணியின் ஸ்கோர் நிச்சயம் 250 ரன்களை கடந்திருக்கும். 

ஆனால் எதிர்முனையில் நின்றிருந்த வீரர்கள் அனைவரும் பவுலர்களாக இருக்கின்றனர். குறிப்பாக 8வது விக்கெட்டில் இருந்தே ஷமி, பும்ரா, குல்தீப் யாதவ் உள்ளிட்டோர் களமிறங்கினர்.

இவர்கள் மூவருமே முழுமையான பந்துவீச்சாளர்கள் என்பதோடு, பேட்டிங்கில் ஓரளவு கூட ஒத்துழைப்பு கொடுக்க முடியாதவர்களாக இருப்பது தான் பின்னடைவாக உள்ளது. நேற்றைய ஆட்டத்தில் கடைசி நேரத்தில் களமிறங்கிய பேட் கம்மின்ஸ் 40 ரன்களுக்கும் அதிகமாக சேர்த்தார். 

அதேபோல் நியூசிலாந்து அணியில் சான்ட்னர், சவுதி மற்றும் போல்ட் உள்ளிட்டோர் அசாத்தியமாக சிக்சர்களை விளாச கூடியவர்களாக உள்ளனர்.

ஆனால் இந்திய அணியில் 7 விக்கெட்டுகளை இழந்தாலே, ரன் குவிப்பு முடிவுக்கு வந்துவிடுகிறது. இதன் காரணமாக தான் இந்திய அணியில் ஷர்துல் தாக்கூர் தேவையாக உள்ளார். 

ஒவ்வொரு தொடரிலும் இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொதப்புவது புதிதல்ல. ஒருவேளை டாப் ஆர்டர் சொதப்பினால், எழுச்சி பெற்று வெற்றியடைய வேண்டும் என்பதால் தான் கேஎல் ராகுல் 5வது வீரராக களமிறக்கப்படுகிறார்.
 
அவருக்கு உதவியாக ஹர்திக் பாண்டியா, ஜடேஜா ஆகியோர் இருப்பதோடு டெய்ண்டர்களும் இருந்தால் இந்திய அணியின் பேட்டிங் வரிசை 9வது விக்கெட் வரை இருக்கும் என்று திட்டமிடப்பட்டது. 

ஆனால் இன்றைய ஆட்டத்தில் ஷர்துல் தாக்கூர் இல்லாததன் விளைவு இன்றைய ஆட்டத்தில் இந்திய அணியின் கடைசி 4 பேட்ஸ்மேன்களால் வெறும் 26 ரன்கள் மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளது. இதனால் அடுத்தடுத்த போட்டிகளில் இந்திய அணியின் பேட்டிங் ஆர்டரை அதிகப்படுத்தும் வகையில் ஷர்துல் தாக்கூரை சேர்க்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp