இந்திய அணியின் தோல்விக்கு அதுதான் காரணமா? வெளியான முக்கிய தகவல்!

நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் இந்திய அணி இழந்திருப்பது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய அணியின் தோல்விக்கு அதுதான் காரணமா? வெளியான முக்கிய தகவல்!

நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் இந்திய அணி இழந்திருப்பது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அத்துடன், தொடர்ச்சியாக 18 டெஸ்ட் தொடர்களை சொந்த மண்ணில் இந்திய அணி வென்றிருந்த நிலையில்,13 வருடங்களுக்கு பிறகு முதல்முறையாக இந்திய அணி சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரை இழந்துள்ளது. 

இந்திய மண்ணில் இந்திய அணி தொடரை இழந்தமைக்கு பயிற்சியாளர் கவுதம் கம்பீரும் பொறுப்பேற்க வேண்டும் என்ற விமர்சனங்கள் எழுந்துள்ளன. கவுதம் கம்பீர் பொறுப்புக்கு வந்த பின்னர் நடக்கும் 2வது டெஸ்ட் தொடர் இதுவாகும்.

தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீரின் குழுவில் உள்ள மோர்னே மோர்கல், ரியான் டென் டஸ்காட்டே, அபிஷேக் நாயர் மற்றும் திலீப் உள்ளிட்டோரில் மோர்னே மோர்கல்லை தவிர்த்து வேறு எந்த வீரருக்கும் முழுமையான டெஸ்ட் கிரிக்கெட் அனுபவம் கிடையாது. 

ஏனென்றால், கவுதம் கம்பீர் கூட 58 டெஸ்ட் போட்டிகளில் தான் விளையாடி உள்ளார் என்பதுடன், முன்னதாக இந்திய அணியின் பயிற்சியாளர்களாக இருந்த ரவி சாஸ்திரி, அனில் கும்ப்ளே, ராகுல் டிராவிட் உள்ளிட்டோருக்கு அதிக டெஸ்ட் அனுபவம் உள்ளது.

ஆனால் கவுதம் கம்பீரை பொறுத்தவரை அவர் உள்ளூர் கிரிக்கெட்டில் கூட எந்த ரஞ்சி அணிக்கும் பயிற்சி அளித்தது கிடையாது. இந்த நிலையில்தான் டெஸ்ட் கிரிக்கெட்டையும் டி20 போலவே கவுதம் கம்பீர் பார்ப்பதாக விமர்னங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இதனால் பயிற்சியாளர்கள் குழுவில் டெஸ்ட் அனுபவம் வாய்ந்த சிலரை கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கைகள் தற்போது எழுந்துள்ளதுடன், பவுலிங் பயிற்சியாளராக உள்ள மோர்னே மோர்கல் வேகப்பந்துவீச்சாளர் என்பதால், அவருக்கு உள்ள இந்திய பிட்ச் குறித்து தெளிவு என்பது சந்தேகம் தான். 

இந்த நிலையில், ஸ்பின்னர்களான அஸ்வின், ஜடேஜா, குல்தீப் யாதவ், அக்சர் படேல் மற்றும் வாஷிங்டன் சுந்தர் உள்ளிடோருக்கு எப்படி அவர் பயிற்சி அளிப்பார் என்ற கேள்வியை ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்.

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp