ஹர்திக் காயம்.. 2 வீரர்களுக்கு வாய்ப்பு... இந்திய அணியின் மாற்று திட்டம் இதுதான்!

ஹர்திக் பாண்டியா காயம் காரணமாக நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இருந்து விலகியுள்ள நிலையில், இந்திய அணி மாற்று திட்டங்கள் என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

ஹர்திக் காயம்.. 2 வீரர்களுக்கு வாய்ப்பு... இந்திய அணியின் மாற்று திட்டம் இதுதான்!

ஹர்திக் பாண்டியா காயம் காரணமாக நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இருந்து விலகியுள்ள நிலையில், இந்திய அணி மாற்று திட்டங்கள் என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

வங்கதேச அணிக்கு எதிரான போட்டியின் போது இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா இடதுகை காலில் காயம் ஏற்பட்டது. 

இதன் காரணமாக மைதானத்தில் இருந்து வெளியேறி, உடனடியாக ஸ்கேன் செய்ய அழைத்து செல்லப்பட்டார். இதையடுத்து நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் ஹர்திக் பாண்டியா விலகியதாக பிசிசிஐ அறிவித்தது.

இந்திய அணியில் ரோகித் சர்மா, விராட் கோலியை விடவும் முக்கியமான வீரராக இருந்தவர் ஹர்திக் பாண்டியா. ஃபினிஷர் மற்றும் 3வது வேகப்பந்துவீச்சாளராக செயல்பட்ட வீரர் காயமடைந்து விலகியுள்ளதால், அவரது இடத்தை நிரப்புவது சாதாரண விஷயமாக இருக்காது. அதேபோல் இந்திய அணியில் வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டர்கள் இல்லை.

இதனால் நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் மொத்த திட்டத்தையும் மாற்ற வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இத்தனை போட்டிகளில் 6 பவுலர்கள், 8வது வீரர் வரை பேட்டிங் திறமை உள்ளவர்கள் என்று மிகச்சிறந்த திட்டத்துடன் இந்திய அணி களமிறங்கியது. 

ஆனால் ஹர்திக் பாண்டியாவின் காயம் 5 பவுலர்கள் மற்றும் 6 பேட்ஸ்மேன்கள் என்று விளையாட வேண்டிய சூழலை இந்திய அணிக்கு ஏற்படுத்தியுள்ளது.

இதனால் இந்திய அணி தரப்பில் ஹர்திக் பாண்டியாவின் இடத்தை நிரப்ப முழு நேர பந்துவீச்சாளர் மற்றும் முழு நேர பேட்ஸ்மேனை களமிறக்க வேண்டிய நிலை உள்ளது. 

இதன் காரணமாக இந்திய அணியில் ஷர்துல் தாக்கூர் நீக்கப்பட்டு அவரது இடத்தில் முகமது ஷமி சேர்க்கப்பட வாய்ப்புகள் உள்ளது. இதனால் பும்ரா, சிராஜ் மற்றும் ஷமி மூவரும் ஒரே போட்டியில் விளையாடும் வாய்ப்புள்ளது.

அதேபோல் ஹர்திக் பாண்டியாவின் ஃபினிஷர் ரோலில் விளையாடும் திறமை கொண்ட சூர்யகுமார் யாதவை பிளேயிங் லெவனில் கொண்டு வர வாய்ப்புள்ளது. 

அதுமட்டுமல்லாமல் ஆசிய கோப்பை தொடரில் இருந்தே சூர்யகுமார் யாதவ் வலைப்பயிற்சியில் ஸ்பின்னராக சில ஓவர்களை வீசி பயிற்சி மேற்கொண்டு வருகிறார். இதனால் இந்திய அணியில் பேட்டிங் பலம் குறையும் என்றாலும், சேதாரங்களை தவிர்க்கப்பட வாய்ப்புகள் உள்ளது.

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp