மோசமான பிட்ச்சில் நடக்கவுள்ள இந்தியா - பாகிஸ்தான் போட்டி.. ஐசிசி வைத்த ஆப்பு!
போட்டி நடக்கவுள்ள மைதானத்தில் இருக்கும் பிட்ச்சுகள் பந்து வீச்சுக்கு ஒத்துழைத்தாலும், பந்து பிட்ச்சில் பட்டவுடன் இரண்டு விதமான வேகத்தில் மேலே எழுந்தது.
2024 டி20 உலகக் கோப்பை தொடரின் மிக முக்கியமான போட்டியான இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி நியூயார்க் நகரில் நாசா கவுண்டி மைதானத்தில் இன்று நடக்கவுள்ளது.
போட்டி நடக்கவுள்ள மைதானத்தில் இருக்கும் பிட்ச்சுகள் பந்து வீச்சுக்கு ஒத்துழைத்தாலும், பந்து பிட்ச்சில் பட்டவுடன் இரண்டு விதமான வேகத்தில் மேலே எழுந்தது.
இது போன்ற பிட்ச்களை மோசமான பிட்ச் என்றுதான் பேட்ஸ்மேன்கள் கூறும் நிலையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இந்தியா - பாகிஸ்தான் போட்டி குறித்து உறுதி அளித்தது.
இந்தியா - பாகிஸ்தான் போட்டி நடக்கும். பிட்ச்சை தங்களால் இயன்றவரை சரி செய்வோம் என கூறியிருந்தனர்.
எனினும், தென்னாப்பிரிக்கா - நெதர்லாந்து அணிகள் மோதிய போட்டியில் எந்த பிட்ச் பயன்படுத்தப்பட்டதோ அதே பிட்ச்தான் இந்தியா - பாகிஸ்தான் போட்டிக்கும் பயன்படுத்த உள்ளதாக கூறப்படுகின்றது.
இந்த பிட்சில் நடைபெற்ற ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா - நெதர்லாந்து ஆகிய இரண்டு அணிகளுமே பேட்டிங்கில் தடுமாறிளதுடக், நெதர்லாந்து அணி 20 ஓவர்களில் ஒன்பது விக்கெட் இழப்பிற்கு 103 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இந்தியா - பாகிஸ்தான் போட்டி: நீக்கப்பட்ட முக்கிய வீரர்.. பாகிஸ்தான் அணிக்கு ஏற்ப்பட்டுள்ள சிக்கல்!
அத்துடன், தென்னாபிரிக்கா அணி 12 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்து இருந்தது. இந்த நிலையில், மோசமான பிட்சாக பார்க்கப்படும் இதே பிட்ச்சில் தான் இந்தியா - பாகிஸ்தான் போட்டி நடக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.