சிக்சர் மழை.... கிறிஸ் கெய்ல் சாதனைக்கு ஆப்பு.. டி வில்லியர்ஸ் சாதனை சமன்.. ரோகித்னா சும்மாவா!
பின்னர் இங்கிடி வீசிய 5வது ஓவரில் ரோகித் சர்மா அடுத்தடுத்து 2 சிக்சர்களை பறக்கப்பட்டார். இதனால் 5 ஓவர்களிலேயே இந்திய அணியின் ஸ்கோர் 60 ரன்களுக்கு மேல் உயர்ந்தது.
உலகக்கோப்பை தொடரில் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி விளையாடி வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார்.
இதன்பின் இந்திய அணி தரப்பில் ரோகித் சர்மா - சுப்மன் கில் இணை தொடக்கம் கொடுத்தது. தென்னாப்பிரிக்கா அணி தரப்பில் இங்கிடி முதல் ஓவரை வீசினார். அதில் பவுண்டரியுடன் இந்திய அணியின் ரன் கணக்கை ரோகித் சர்மா தொடங்கினார்.
இதன்பின் யான்சன் வீசிய 2வது ஓவரில் 17 ரன்கள் விளாசப்பட்டது. தொடர்ந்து இங்கிடி வீசிய 3வது ஓவரில் ரோகித் சர்மா 2 பவுண்டரியையும், சுப்மன் கில் ஒரு பவுண்டரியையும் விளாசினர்.
பின்னர் இங்கிடி வீசிய 5வது ஓவரில் ரோகித் சர்மா அடுத்தடுத்து 2 சிக்சர்களை பறக்கப்பட்டார். இதனால் 5 ஓவர்களிலேயே இந்திய அணியின் ஸ்கோர் 60 ரன்களுக்கு மேல் உயர்ந்தது.
சிறப்பாக ஆடிய ரோகித் சர்மா அரைசதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 24 பந்துகளில் 40 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார். ரபாடா பந்தில் பவுண்டரி அடிக்க முயன்று ரோகித் சர்மா அடுத்த ஷாட் பவுமா கைகளுக்கு நேராக சென்று கேட்ச்சானது.
இதன் மூலம் உலகக்கோப்பை தொடரில் 3வது முறையாக ரோகித் சர்மா அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டுள்ளார். இருப்பினும் இன்றைய ஆட்டத்தில் 2 சிக்சர்களை விளாசியதன் மூலம் முக்கியமான சாதனை ஒன்றையும் ரோகித் சர்மா படைத்துள்ளார்.
ஒருநாள் கிரிக்கெட்டில் ஒரு ஆண்டில் அதிக சிக்சர்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் 58 சிக்சர்களுடன் தென்னாப்பிரிக்கா முன்னாள் வீரர் டி வில்லியர்ஸ் முதலிடத்தில் உள்ளார்.
அதேபோல் 56 சிக்சர்களுடன் வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் கிறிஸ் கெய்ல் இரண்டாவது இடத்தில் இருந்தார். இந்த நிலையில் இன்றைய ஆட்டத்தில் ரோகித் சர்மா 2 சிக்சர்கள் விளாசியதன் மூலமாக கிறிஸ் கெய்ல் சாதனையை முறியடித்ததோடு, 58 சிக்சர்கள் விளாசி டி வில்லியர்ஸ் சாதனையையும் சமன் செய்துள்ளார்.
உலகக்கோப்பை தொடரில் குறைந்தபட்சம் இன்னும் 2 போட்டிகள் இருப்பதால், டி வில்லியர்ஸ் சாதனையை ரோகித் சர்மா முறியடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.