முகமது ஷமியால் பும்ராவின் மரண மாஸ் ரெக்கார்டை மறந்த ரசிகர்கள்! என்ன தெரியுமா?
வெறும் 55 ரன்களுக்கு இலங்கை அணி ஆல் அவுட்டாகியது. இதனால் ஆசிய கோப்பை இறுதிப்போட்டியை போல் மீண்டும் இந்திய அணி ஆதிக்கம் செலுத்தியதாக இந்திய அணி ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.
இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 302 ரன்கள் வித்தியாசத்தில் மிரட்டலான வெற்றியை பெற்றுள்ளது. இதன் காரணமாக புள்ளிப்பட்டியலில் முதல் இடத்திற்கு இந்திய அணி முன்னேறியதோடு, அரையிறுதி சுற்றிலும் கால் பதித்துள்ளது.
இதன் மூலமாக தொடர்ச்சியாக 4 உலகக்கோப்பை தொடர்களில் இந்திய அணி அரையிறுதிக்கு முன்னெறியுள்ளது. நேற்றைய ஆட்டத்தில் முகமது சிராஜ் மற்றும் முகமது ஷமி ஆகியோரின் பந்துவீச்சில் இலங்கை பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
வெறும் 55 ரன்களுக்கு இலங்கை அணி ஆல் அவுட்டாகியது. இதனால் ஆசிய கோப்பை இறுதிப்போட்டியை போல் மீண்டும் இந்திய அணி ஆதிக்கம் செலுத்தியதாக இந்திய அணி ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.
இதில் முகமது ஷமி 5 விக்கெட்டுகளையும், முகமது சிராஜ் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். அதேபோல் இலங்கை அணியின் பேட்ஸ்மேன்கள் ஆட்டமிழக்க நட்சத்திர வீரர் பும்ரா முதல் பந்திலேயே நிசாங்காவை வீழ்த்தி பிள்ளையார் சுழி போட்டார்.
இலங்கை அணியின் தொடக்க வீரரான நிசாங்கா நடப்பு உலகக்கோப்பை தொடரில் மட்டும் 4 அரைசதங்களை விளாசி தள்ளியுள்ளார்.
அவரை விரைந்து விக்கெட் வீழ்த்த வேண்டும் என்று கூறப்பட்டு வந்த நிலையில், முதல் பந்திலேயே டக் அவுட்டாகி வெளியேறினார். இதன் மூலம் 48 ஆண்டு கால உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வரலாற்றில் முதல் பந்திலேயே விக்கெட் வீழ்த்திய முதல் இந்திய வீரர் என்ற சாதனையை பும்ரா படைத்துள்ளார்.
அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வீரர் என்ற சாதனையை ஷமி படைத்ததால், இந்த சாதனை ரசிகர்களிடையே கண்டுகொள்ளப்படவில்லை.
நடப்பு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் 7 போட்டிகளில் விளையாடியுள்ள பும்ரா 15 விக்கெட்டுகளை வீழ்த்தி அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் 5வது இடம் பிடித்து அசத்தியுள்ளார். இவருக்கு பின் முகமது ஷமி 3 போட்டிகளில் விளையாடி 14 விக்கெட்டுகளுடன் ஆறாவது இடத்தை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.க