இலங்கை தொடரில் இருந்து திடீரென விலகிய ஹர்திக்... இந்திய ஒருநாள் அணியின் கேப்டன் யார்?

ஐசிசி டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரை வென்று பிறகு இந்திய அணியின் ஸ்டார் வீரர்கள் தற்போது ஓய்வில் இருக்கின்றனர். 

இலங்கை தொடரில் இருந்து திடீரென விலகிய ஹர்திக்... இந்திய ஒருநாள் அணியின் கேப்டன் யார்?

ஐசிசி டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரை வென்று பிறகு இந்திய அணியின் ஸ்டார் வீரர்கள் தற்போது ஓய்வில் இருக்கின்றனர். 

டி20 உலக கோப்பை தொடர் முடிந்ததை அடுத்து இந்திய அணியின் ஸ்டார் வீரர்கள் தற்போது ஓய்வில் உள்ளதுடன், ஜிம்பாப்வே தொடரில் எந்த ஒரு நட்சத்திர வீரர்களும் பங்கேற்கவில்லை. 

ரோகித் சர்மா, விராட் கோலி ஏற்கனவே தாங்கள் இந்த தொடரில் விளையாடவில்லை என்று கூறிய நிலையில் ஜூலை மாத இறுதியில் நடைபெறவுள்ள இலங்கை அணியுடனான தொடரில் ஹர்திக் பாண்டியா, பும்ரா போன்ற வீரர்கள் எல்லாம் இந்திய அணிக்கு திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. 

இந்த நிலையில், ஹர்திக் பாண்டியாவும் தமது பெயரை இலங்கை தொடருக்கு பரிசீலினை செய்ய வேண்டாம் என்று கூறி இருக்கிறார்.

இதனால், எந்த ஒரு ஸ்டார் வீரர்களும் இல்லாமல் மீண்டும் இந்திய அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதால், இலங்கைத் தொடரில் அடுத்த கேப்டன் யார் என்று கேள்வி எழுந்துள்ளது.

ரோகித் சர்மா இல்லாத நிலையில் உலககோப்பை தொடர்க்கும் முன்பு கே எல் ராகுல் தலைமையிலான இந்திய அணி ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டது.

அத்துடன், தென்னாப்பிரிக்கா தொடரிலும் கேல ராகுல் கேப்டனாக செயற்பட்டுள்ளதுடன்,  பயிற்சியாளர் கம்பீருடன் கே எல் ராகுல் நல்ல உறவில் இருந்ததால், அவருக்கு முன்னுரிமை வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

உள்ளூர் போட்டியில் விளையாடுவது கட்டாயம்; கோலி, ரோகித் உள்ளிட்ட சீனியர் வீரர்களுக்கு ஆப்பு வைத்த கம்பீர்!

இந்த பட்டியலில் ஸ்ரேயாஸ் ஐயர் இரண்டாவது இடத்தில் உள்ளதுடன், கம்பீர் ஸ்ரேயாஸ் பெயரை பரிந்துரைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தில் ரிஷப் பந்த் அல்லது பும்ரா ஆகியோர் இருப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், பும்ராவும் இந்த தொடரில் பங்கேற்பது கேள்விக்குறியாக தான் இருக்கிறது. 

இதனால் ரிஷப் பண்ட், ஒருநாள் அணியின் கேப்டனாக செயல்பட ஆர்வம் காட்டி வருகிறார். இந்த சூழ்நிலையில் டி20 அணியின் கேப்டனாக ஜிம்பாப்வே தொடரில் களமிறங்கிய கில் நியமிக்கப்படுவார்  என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp