இந்தியா - அமெரிக்கா போட்டியில் ஏற்படவுள்ள மிகப்பெரிய தடை... இந்தியாவுக்கு ஏற்பட்டுள்ள கடும் சவால்!
இந்தியா மற்றும் அமெரிக்கா அணிகள் மோத உள்ள கிரிக்கெட் போட்டி நியூயார்க் நாசா கவுண்டி மைதானத்தில் இந்திய நேரப்படி ஜூன் 12ஆம் தேதி இரவு 8 மணிக்கு தொடங்கவுள்ளது.
இந்தியா மற்றும் அமெரிக்கா அணிகள் மோத உள்ள கிரிக்கெட் போட்டி நியூயார்க் நாசா கவுண்டி மைதானத்தில் இந்திய நேரப்படி ஜூன் 12ஆம் தேதி இரவு 8 மணிக்கு தொடங்கவுள்ளது.
முன்னதாக நடைபெற்ற இந்தியா -பாகிஸ்தான் போட்டி மழையால் சிறிது பாதிக்கப்பட்ட நிலையில், இந்தியா மற்றும் அமெரிக்கா மோதும் இந்த போட்டிக்கும் பாதிப்பு ஏற்படுமா என்ற சந்தேகம் காணப்படுகின்றது.
பாகிஸ்தான் வீரர்களை பார்த்து ரோஹித், கோலி செய்த காரியம்... இணையத்தில் வைரலாகும் வீடியோ!
இந்தியா - அமெரிக்கா மோதும் போட்டியின் போது மழை பெய்ய வாய்ப்பு இல்லை என வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், போட்டி நடக்கும் நேரத்தில் வானம் மேகமூட்டமாக இருக்கும்.
அத்துடன், காற்றில் உள்ள ஈரப்பதம் 50 சதவீதமாக இருக்கும் என கூறப்பட்டுள்ளதால், இது பேட்டிங் மற்றும் பவுலிங் செய்யும் இரண்டு தரப்புக்கும் சாதகமான சூழ்நிலையாகவே இருக்கும்.
பிட்ச்சை பொறுத்தவரை அங்கு ரன் குவிப்பது மிகவும் சிரமமாக உள்ளதால், பிட்ச் குறித்தே இந்திய அணி அதிகம் கவலைப்பட வேண்டும்.
அமெரிக்க அணியானது கனடா மற்றும் பாகிஸ்தான் அணிகளை வீழ்த்தி இந்திய அணியை எதிர்கொள்ள வருகிறது. இந்த நிலையில், இந்திய அணியானது அமெரிக்க அணியை குறைவாக எடை போட்டு விடக்கூடாது.
பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்தியா பேட்டிங்கில் சொதப்பி இருந்தது. அமெரிக்க அணி இந்தப் போட்டியில் வெற்றி பெற்றால் நேரடியாக சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறி விடும் என்பதுடன், இந்திய அணி வெற்றி பெற்றாலும் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறி விடும்.