தொடர்ந்து சொதப்பும் ரோஹித் சர்மா... இந்தியாவுக்கு அனுப்புங்கள்... ரசிகர்கள் விமர்சனம்!

இந்திய அணியின் டாப் 5 வீரர்கள் யாரும் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. 

தொடர்ந்து சொதப்பும் ரோஹித் சர்மா... இந்தியாவுக்கு அனுப்புங்கள்... ரசிகர்கள் விமர்சனம்!

தொடர்ந்து மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மீது விமர்சனம் அதிகரித்துள்ள நிலையில், ஆஸ்திரேலியா டெஸ்டின் இரு இன்னிங்ஸ்களிலும் சொதப்பியதால், அவரை இந்தியாவுக்கே மீண்டும் திருப்பி அனுப்புமாறு  ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதுடன், முதல் இன்னிங்ஸில் இந்திய அணி வெறும் 180 ரன்கள் மட்டுமே சேர்த்ததுடன், ஆஸ்திரேலியா அணி 337 ரன்களை குவித்து, 157 ரன்கள் முன்னிலை பெற்றது.

இதனையடுத்து, 2வது இன்னிங்ஸில் இந்திய அணி 128 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருவதுடன், இந்திய அணியின் டாப் 5 வீரர்கள் யாரும் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. 

இரு இன்னிங்ஸ்களிலும் பேட்ஸ்மேன்கள் சொதப்பியதால், இந்திய அணியின் தோல்வி கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளதுடன், அதில் கேப்டன் ரோஹித் சர்மாவின் பேட்டிங்கால் ரசிகர்கள் கொந்தளித்து வருகின்றனர்.

ஏற்கனவே நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 6 இன்னிங்ஸ்களிலும் சேர்த்து ரோஹித் சர்மா 92 ரன்களை மட்டுமே சேர்த்திருந்தார். இதன்பின் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இருந்து ரோஹித் சர்மா விலகிய நிலையில், தற்போது நடந்து வரும் 2வது டெஸ்ட் போட்டிக்கு இந்திய அணியுடன் இணைந்தார்.

ஏற்கனவே ஆஸ்திரேலியா மண்ணில் மிடில் ஆர்டரில் விளையாடிய அனுபவம் ரோஹித் சர்மாவுக்கு இருப்பதால், இந்திய அணிக்கு பலனளிக்கும் என்று பார்க்கப்பட்டது. ஆனால் இரு இன்னிங்ஸ்களிலும் ரோஹித் சர்மா 3 மற்றும் 6 ஆகிய ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறி இருக்கிறார்.

இதனால் கடைசியாக ஆடிய 8 இன்னிங்ஸ்கள் ரோஹித் சர்மா மொத்தமாக 101 ரன்களை மட்டுமே சேர்த்திருக்கிறார். இதுமட்டுமல்லாமல் கேப்டனாகவும் சொந்த மண்ணில் 3 போட்டிகளில் தொடர்ந்து தோல்வியடைந்த நிலையில், தற்போது 4வது தோல்வி லோடிங்கில் உள்ளது. 

இதனால் வெளிநாடுகளில் ரோஹித் சர்மாவின் அணுகுமுறை இந்திய அணிக்கு வெற்றியை தேடி தருமா என்ற ரசிகர்கள் சந்தேகம் எழுப்பி வருகின்றனர்.

இதனிடையே ரோஹித் சர்மா 2023ஆம் ஆண்டில் இருந்து வலதுகை வேகப்பந்துவீச்சாளர்கள் வீசிய அவுட்சைட் ஆஃப் பந்துகளில் மட்டும் 13 முறை ஆட்டமிழந்திருக்கிறார். 

இந்திய அணியில் வேறு எந்த வீரருக்கும் பேட்டிங் டெக்னிக்கில் இப்படியான சிக்கல்கள் இல்லை. இதனால் இந்திய அணியின் கேப்டனாக பும்ராவை அறிவித்து, ரோஹித் சர்மாவை விமானம் ஏற்றி இந்தியாவுக்கு அனுப்ப வேண்டும் என்று ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp