2ஆவது டெஸ்டில் இந்தியா தோற்றால்.. WTC பைனலுக்கு முன்னேற என்ன செய்ய வேண்டும்? விபரம் இதோ!
தற்போதைக்கு, பகலிரவு டெஸ்டில், ஆஸ்திரேலிய அணிக்குதான், வெற்றி வாய்ப்பு, சற்று பிரகாசமாக இருப்பதாக கருதப்படுகிறது.
இந்தியா, ஆஸ்திரேலியா இடையில், 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் போட்டியில் இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் தோற்ற நிலையில், தற்போது பகலிரவு ஆட்டமாக நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில், முதல் இன்னிங்ஸில் 150+ ரன்கள் முன்னிலையை ஆஸ்திரேலிய அணி பெற்றிருக்கிறது.
இதனால், தற்போதைக்கு, பகலிரவு டெஸ்டில், ஆஸ்திரேலிய அணிக்குதான், வெற்றி வாய்ப்பு, சற்று பிரகாசமாக இருப்பதாக கருதப்படுகிறது. இந்திய அணி, இந்த 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், 4-0 என்ற கணக்கில் வெற்றியைப் பெற்றால் மட்டுமே, மற்ற அணிகளின் வெற்றி, தோல்விகளை எதிர்பார்க்காமல், நேரடியாக பைனலுக்கு முன்னேற முடியும்.
ஒரு போட்டியில் தோற்றாலும் கூட, மற்ற அணிகளின் வெற்றி, தோல்விகளை எதிர்பார்த்து காத்திருக்க வேண்டிய நிலைதான் ஏற்படும். இந்நிலையில், இந்திய அணி, ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் தோற்றால், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு முன்னேற, அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று பார்க்கலாம்.
இந்திய அணி, இரண்டாவது டெஸ்டில் தோற்று, அடுத்த மூன்றிலும் வென்று, 4-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றினால், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் இந்தியா, தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும்.
ஒருவேளை, இந்திய அணி, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 3-1 என்ற கணக்கில் வென்றால், தென்னாப்பிரிக்க அணியானது இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வெற்றியைப் பெறக் கூடாது.
ஒருவேளை, இந்தியா 3-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக வென்று, தென்னாப்பிரிக்க அணி, இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் வென்றால், இந்தியா வெளியேறிவிடும். இலங்கை அணி, தென்னாபிரிக்காவுக்கு எதிரான 2ஆவது டெஸ்டை டிரா செய்தால், இந்தியாவுக்கு பைனல் வாய்ப்பு இருக்கும்.
ஒருவேளை, இந்திய அணி, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 3-2 என்ற கணக்கில் தோற்றால், இலங்கை அணி, அடுத்து ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2 டெஸ்டில், ஒரு டெஸ்டை டிரா செய்தாக வேண்டும்.
இலங்கை, ஆஸ்திரேலியா இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர், ஜனவரி 29ஆம் தேதி இலங்கையில் துவங்கும். (3-2 என இந்தியா வென்றால், இலங்கைக்கு எதிரான கடைசி டெஸ்டில் தென்னாப்பிரிக்கா வென்றாலும், வெல்லவில்லை என்றாலும், தென்னாப்பிரிக்கா பைனலுக்கு முன்னேறிவிடும்)
ஒருவேளை, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 2-2 என இந்திய அணி, தொடரை சமன் செய்தால், இலங்கை அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் வென்றால் மட்டுமே, இந்தியாவுக்கு பைனல் வாய்ப்பு இருக்கும். மற்றொரு பைனல் இடம், தென்னாப்பிரிக்க அணிக்கு சென்றுவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.