ரவி பிஷ்னாய் தனித்துவம் மிக்கவர்.. முரளிதரன் பாராட்டு!
ரவி பிஷ்னாய்-க்கு சுழற்பந்துவீச்சு ஜாம்பவான் முரளிதரன் பாராட்டு தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் இளம் சுழற்பந்துவீச்சாளர் ரவி பிஷ்னாய் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டி20 தொடரில் 9 விக்கெட்டுகளை வீழ்த்தி தொடர் நாயகன் விருதை தட்டி சென்றார்.
அதுமட்டுமல்லாமல் டி20 தொடரில் இந்திய அணி சார்பாக அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்கள் பட்டியல் ரவிச்சந்திரன் அஸ்வினின் சாதனையை சமன் செய்துள்ளார்.
கேப்டன் சூர்யகுமார் யாதவ் அவர் மீது வைத்த நம்பிக்கையை ஒவ்வொரு முறையும் காப்பாற்றி அசத்தலான பந்துவீச்சை வெளிப்படுத்தினார். லெக் ஸ்பின்னர் என்றாலும் பெரியளவில் ஸ்பின் செய்ய முடியாத ரவி பிஷ்னாய், அதிகளவிலான கூக்ளி பந்துகளை வீசி விக்கெட்டுகளை கைப்பற்றுகிறார். இவரது கூக்ளிகளை கண்டுபிடிக்க பேட்ஸ்மேன்கள் திணறி வருகின்றனர்.
இந்த நிலையில் ரவி பிஷ்னாய்-க்கு சுழற்பந்துவீச்சு ஜாம்பவான் முரளிதரன் பாராட்டு தெரிவித்துள்ளார். எங்கள் காலத்தில் அனில் கும்ப்ளே, இப்போது ரவிச்சந்திரன் அஸ்வின் என்று அடுத்தடுத்து உருவாகியுள்ளனர்.
தற்போது இளம் ஸ்பின்னர்கள் எழுச்சியுடன் பந்துவீசி வருகிறார்கள். அதிலும் லெக் ஸ்பின்னர்களில் ரவி பிஷ்னாய் தனித்துவமாக இருக்கிறார். அவர் வீசும் ஒவ்வொரு பந்தையும் அதிக வேகத்தில் வீசுவதோடு, கணிக்க முடியாத வகையில் பந்தை பயன்படுத்துகிறார்.
அதேபோல் அக்சர் படேலின் பந்துவீச்சில் துல்லியம் இருக்கிறது. அவரை போலவே வாஷிங்டன் சுந்தரும் ஸ்பின் இல்லையென்றாலும் சிறப்பாக செயல்படுவதாக தெரிவித்துள்ளார்.