தற்காலிகமாக ஓய்வு பெறும் இந்திய ஸ்டார் வீரர்... ரசிகர்கள் அதிர்ச்சி... பிசிசிஐ அப்டேட்!

இந்திய அணியில் இருந்து விலகி, தற்காலிக ஓய்வுக்கு செல்வதாக ஸ்டார் வீரர் தெரிவித்துள்ளார்.

தற்காலிகமாக ஓய்வு பெறும் இந்திய ஸ்டார் வீரர்... ரசிகர்கள் அதிர்ச்சி... பிசிசிஐ அப்டேட்!

அறுவை சிகிச்சை, அதனைத் தொடர்ந்து ஓய்வு போன்ற காரணங்களுக்காக,  இந்திய அணியில் இருந்து விலகி, தற்காலிக ஓய்வுக்கு செல்வதாக ஸ்டார் வீரர் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் 17ஆவது சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிய ஷர்தூல் தாகூர், தனது கால் பாதத்தில் ஏற்பட்ட காயத்திற்கு சிகிச்சை எடுப்பதற்காக, லண்டன் சென்ற நிலையில், அவருக்கு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.

2019ஆம் ஆண்டிலும், ஷர்தூல் தாகூருக்கு இதேபோல் பாதத்தில் காயம் ஏற்படத்தை தொடர்ந்து, அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருந்தது. தற்போது, அதேபோல் ஒரு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், தனக்கு தற்காலிகமாக ஓய்வு வேண்டும் என ஷர்தூல் தாகூர் தெரிவித்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

காயம் முழுமையாக குணமடைய 3 மாதங்கள் ஆகும் எனக் கணிக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் 6 மாதங்கள் வரை தனக்கு ஓய்வு வேண்டும் என ஷர்தூல் கேட்டுக்கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.

ஷர்தூல் தாகூர் கடைசியாக, கடந்த வருடம் நடைபெற்ற தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான பாக்‌சிங் டே டெஸ்டில், இந்திய அணிக்காக இருதரப்பு தொடரில் விளையாடி இருந்தார்.

2023ஆம் ஆண்டில் நடைபெற்ற ஆசியக் கோப்பை தொடரில், இந்தியா கோப்பை வென்றபோது, அந்த அணியில் ஷர்தூக் தாகூர் இருந்தார். அதேபோல், டி20 உலகக் கோப்பை 2023 தொடரிலும் இடம்பெற்ற ஷர்தூல் தாகூர், 3 போட்டிகளில் விளையாடி இருந்தார்.

ஷர்தூல் தாகூர், அடுத்த உள்நாட்டு தொடரில் தான் விளையாடுவார் எனக் கூறப்படுகிறது. அதுவரை, தனியாக பயிற்சிகளை மேற்கொண்டு, தனது திறமைகளை மேம்படுத்த திட்டமிட்டுள்ளார்.

வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் ஷர்தூல் தாகூர், இந்திய அணி ஒப்பந்தத்தில் சி பிரிவில் இடம்பெற்றுள்ளார். இதனால், ஷர்தூலின் சிகிச்சை கட்டணத்தை பிசிசிஐயே ஏற்றுக்கொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது.

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp