ஒருநாள் அணியில் இருந்து நீக்கப்பட்ட கே.எல்.ராகுல்.. 2 ஸ்டார் வீரர்களுக்கும் இடமில்லை!
இந்தியாவுக்கு வந்துள்ள இங்கிலாந்து அணி, முதலில் 5 போட்டிகள் கொண்ட டி20தொடரில் பங்கேற்று தொடரை இழந்த நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் ஆரம்பமாகவுள்ளது.
இந்தியாவுக்கு வந்துள்ள இங்கிலாந்து அணி, முதலில் 5 போட்டிகள் கொண்ட டி20தொடரில் பங்கேற்று, 1-4 என்ற கணக்கில் தொடரை இழந்த நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் ஆரம்பமாகவுள்ளது.
பிப்ரவரி 6ஆம் தேதி முதல் போட்டியும், 9 மற்றும் 12 ஆகிய தேதிகளில் அடுத்த இரண்டு போட்டிகள் நடைபெறவுள்ள நிலையில், முதல் ஒருநாள் போட்டிக்கான இந்திய உத்தேச 11 அணி குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
அதன்படி, கே.எல்.ராகுல் பார்மில் இருந்தாலும், அவருக்கு 5ஆவது இடத்தில்தான் வாய்ப்பு கிடைக்கும் என்றும், அவர் 35 ஓவருக்கு பிறகு களமிறங்கவே வாய்ப்புள்ளதுடன், அப்படி, 35 ஓவருக்கு பிறகு என்றால், தொடர்ச்சியாக அதிரடி காட்ட வேண்டும் என்ற நிலை காணப்படுகின்றது.
இதனால், ரிஷப் பந்த்தான் அதற்கு பொருத்தமாக இருப்பார் என்பதால், 5ஆவது இடத்திற்கு கே.எல்.ராகுலுக்கு மாற்றாக ரிஷப் பந்த் தேர்வு செய்யப்பட தான் அதிக வாய்ப்புள்ளதுடன், முதல் இரண்டு போட்டிகளில் ரிஷப் பந்த் சொதப்பினால் மட்டுமே, அடுத்து ராகுலுக்கு இடம் கிடைக்கும்.
இதேவேளை, யாஷஸ்வி ஜெய்ஷ்வால் மற்றும் பும்ரா ஆகியோருக்கும் முதல் ஒருநாள் போட்டியில் வாய்ப்பு கிடைக்காது எனக் கருதப்படுகிறது. ஷுப்மன் கில் முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளில் சொதப்பினால் மட்டுமே, யாஷஸ்வி ஜெய்ஷ்வாலுக்கு ஓபனர் இடத்தில் வாய்ப்பு கிடைக்கும்.
அத்துடன், ஜடேஜாவுக்கு மாற்றாக அக்சர் படேலுக்கு அணியில் வாய்ப்பு கிடைக்கும் என தகவல் வெளியாகி உள்ளது.
இந்திய உத்தேச 11 அணி
- ரோஹித் சர்மா (கேப்டன்)
- ஷுப்மன் கில்
- விராட் கோலி
- ஷ்ரேயஸ் ஐயர்
- ரிஷப் பந்த்
- ஹர்திக் பாண்டியா
- ரவீந்திர ஜடேஜா
- வாஷிங்டன் சுந்தர்
- குல்தீப் யாதவ்
- அர்ஷ்தீப் சிங்
- முகமது ஷமி