ஆஸ்திரேலியா தொடருக்கு பின்னர் டெஸ்டில் ஓய்வுபெற்ற 6 இந்திய வீரர்கள்!

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள்  இடையேயான பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடர் தற்போது நடைபெற்று வருகிறது.

ஆஸ்திரேலியா தொடருக்கு பின்னர் டெஸ்டில் ஓய்வுபெற்ற 6 இந்திய வீரர்கள்!

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் 1996ஆம் ஆண்டில் இருந்து பார்டர் - கவாஸ்கர் கோப்பை  தொடரின்கீழ் ஒவ்வொரு ஆண்டும் உள்நாட்டில், வெளிநாட்டில் என டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றன. 

இந்த டெஸ்ட் தொடரில் தற்போது வரை இந்திய அணியே அதிக முறை தொடரை வென்றுள்ளன. கடந்த நான்கு தொடர்களையும் இந்தியாவே கைப்பற்றியிருக்கிறது.​

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள்  இடையேயான பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. ஆஸ்திரேலிய மண்ணில் இம்முறை 5 போட்டிகள் கொண்ட தொடராக நடைபெறுகிறது.    

இந்தியா - ஆஸ்திரேலியா தொடர்களே பரபரப்பாக இருக்கும். இதுவரை நடந்த 16 தொடர்களில் இந்தியா 11 முறையும், ஆஸ்திரேலியா 5 முறையும் கோப்பையை கைப்பற்றியுள்ளது. கடந்த நான்கு தொடர்களிலும் இந்தியாவே கோப்பையை வென்றிருக்கிறது.   

அந்த வகையில், பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடரின்  போதோ அல்லது தொடர் முடிந்த உடனோ இதுவரை 6 இந்திய வீரர்கள் தங்களின் ஓய்வை அறிவித்துள்ளனர். அவர்கள் யார் யார் என்பதை இங்கு காணலாம். மேலும், இந்த முறையும் தொடர் முடிந்த உடன் சிலர் ஓய்வை அறிவிக்கவும் வாய்ப்புள்ளது.   

அனில் கும்ப்ளே: டெஸ்டில் இந்தியாவுக்கு அதிக விக்கெட்டுகளை (619) வீழ்த்தியவர் அனில் கும்ப்ளே. இவர் இந்தியாவில் 2008ஆம் ஆண்டு நடைபெற்ற தொடரின் மூன்றாவது போட்டியிலேயே ஓய்வை அறிவித்தார். அதன்பின்னர் தான் தோனி கேப்டன்ஸியை பெற்றார்.   

சௌரவ் கங்குலி: இவரும் 2008ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரோடு ஓய்வை அறிவித்தார். அந்த கடைசி போட்டியில் கங்குலி முதல் இன்னிங்ஸில் 85 ரன்களையும், 2ஆவது இன்னிங்ஸில் டக்அவுட்டானார். அந்த போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. மொத்தம் 113 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 16 சதங்களுடன் 7 ஆயிரத்து 212 ரன்களை கங்குலி அடித்திருந்தார்.   

ராகுல் டிராவிட்: இவர் ஆஸ்திரேலியாவில் 2011-12 ஆண்டில் நடைபெற்ற தொடரோடு ஓய்வை அறிவித்தார். அந்த தொடரை இந்தியா 0-4 என்ற கணக்கில் இழந்தது. ராகுல் டிராவிட் மொத்தம் 164 டெஸ்ட் போட்டிகளில் 13,288 ரன்களை 52.31 சராசரியுடன் விளையாடி உள்ளார். மொத்தம் 36 சதங்கள் அடித்துள்ளார்.  

விவிஎஸ் லஷ்மண்: இவர் 2012ஆம் ஆண்டு டெஸ்ட் தொடரோடு ஓய்வை அறிவித்தார். விவிஎஸ் லஷ்மண் 134 டெஸ்ட்களில் 17 சதங்களை அடித்து 8,781 ரன்களை குவித்துள்ளார். 

வீரேந்தர் சேவாக்: 2013ஆம் ஆண்டு ஹைதராபாத்தில் நடைபெற்ற பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடரோடு டெஸ்டில் ஓய்வை அறிவித்தார். சேவாக் 104 டெஸ்ட் போட்டிகளில் 8,586 ரன்களை குவித்தார்.   

எம்எஸ் தோனி: இவர் கேப்டனாக ஆஸ்திரேலியாவுக்கு சென்று, 2014ஆம் ஆண்டில் தொடரின் பாதியிலேயே ஓய்வை அறிவித்தார். தொடர்ந்து விராட் கோலி கேப்டன் பொறுப்பை பெற்றார். தோனி தலைமையில்தான் இந்தியா முதல்முறையாக டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்திற்கு வந்தது. இவர் 90 டெஸ்ட்களில் 4,876 ரன்களை அடித்துள்ளார். அதில் 6 சதங்கள் அடக்கம்.   

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp