பிசிசிஐ வைத்த ட்விஸ்ட்... முதல் டெஸ்ட்டில் உஷாரான இங்கிலாந்து!
மறுமுனையில் காய்ந்த பகுதிகள் குறைவாக இருப்பதால் அது வேகப் பந்துவீச்சாளருக்கு சாதகமாக அமையும்.
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் ஹைதராபாத் மைதான பிட்ச் மூன்று பாகமாக பிரிக்கப்பட்டு இருக்கிறது.
ஸ்பின்னர்களுக்கும், வேகப் பந்துவீச்சாளர்களுக்கும், பேட்ஸ்மேன்களுக்கும் சாதகமாக இருக்கும் வகையில் இந்த பிட்ச் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.
ஒரு பக்க பேட்டிங் முனையில் ஸ்டம்ப்புகளுக்கு அருகே பிட்ச் காய்ந்து போய் உள்ளதுடன், பந்துவீச்சாளர் அந்த இடத்தில் பிட்ச் செய்தால் அது அந்த முனையில் பேட்டிங் செய்யும் பேட்ஸ்மேனுக்கு சாதகமாக அமையும்.
மறுமுனையில் காய்ந்த பகுதிகள் குறைவாக இருப்பதால் அது வேகப் பந்துவீச்சாளருக்கு சாதகமாக அமையும்.
நடுப்பகுதியில் புற்கள் உள்ளதுடன், அடியில் பிட்ச் காய்ந்து இருக்கிறது. அது ஸ்பின் பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும்.
எனவே, இந்தப் போட்டியில் ஸ்பின்னர்களுக்கு வேலை அதிகம் என்பதுடன், ஒரு முனையில் காய்ந்த பகுதி குறைவாக இருப்பதால் வேகப் பந்துவீச்சாளர்கள் முதல் இரண்டு நாட்கள் அந்தப் பகுதியில் ஆதிக்கம் செலுத்த முடியும்.
பொதுவாக இந்திய பிட்ச்கள் ஸ்பின்னர்களுக்கு சாதகமாக இருக்கும் என்பதால், இந்தியா தனக்கு சாதகமாக பிட்ச் தயார் செய்கிறது என குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வருகின்றது.
ஆனால், இந்த முறை முதல் டெஸ்ட்டிலேயே அப்படி ஒரு பெயரை எடுத்து விடக் கூடாது என்பதால், பிசிசிஐ அனைத்து தரப்புக்கும் சாதகங்கள் உள்ள பிட்ச்சை தயார் செய்து உள்ளதாக கூறப்படுகின்றது.
எனினும், இந்த முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்ததால், முதலில் பேட்டிங் செய்யும் அணிக்கு பிட்ச் அதிகம் ஒத்துழைக்கும் என்பதால் இது இந்திய அணிக்கு பின்னடைவாக கூறப்படுகின்றது.