டெஸ்ட் போட்டிகளில் இருந்து கோலி விலகல்: காரணம் என்ன தெரியுமா? 

இந்தியா, இங்கிலாந்து இடையில் 5 டெஸ்ட் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில், முதல் இரண்டு போட்டிகள் முடிந்து, இரு அணிகளும் 1-1 என சமநிலையில் இருக்கிறது. 

டெஸ்ட் போட்டிகளில் இருந்து கோலி விலகல்: காரணம் என்ன தெரியுமா? 

இந்தியா, இங்கிலாந்து இடையில் 5 டெஸ்ட் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில், முதல் இரண்டு போட்டிகள் முடிந்து, இரு அணிகளும் 1-1 என சமநிலையில் இருக்கிறது. 

மூன்றாவது டெஸ்ட் போட்டி, வரும் பிப்ரவரி 15ஆம் தேதி, ராஜ்கோட்டில் நடக்க உள்ள நிலையில், கடைசி மூன்று டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியை பிசிசிஐ இறுதி செய்துள்ளது.

இங்கிலாந்துக்கு எதிரான கடைசி மூன்று டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியை தேர்வு செய்யும் பணியில், பிசிசிஐ நிர்வாகிகள் யாரும் கலந்துகொள்ளவில்லை. 

தேர்வுக்குழு தலைவர் அஜித் அகார்கர், கேப்டன் ரோஹித் சர்மா, பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஆகியோர் மட்டும்தான் கலந்துகொண்டனர். இந்நிலையில், விராட் கோலியின் பெயர் நீக்கப்பட்டுள்ளது. 

டி20 உலகக் கோப்பையில் தனக்கு இடம் கிடைக்காது எனத் தெரிந்தப் பிறகுதான், கோலி விலகிவிட்டதாக கூறப்படுகிறது. கே.எல்.ராகுல், ரவீந்திர ஜடேஜா ஆகியோர் காயம் காரணமாக அவதிப்பட்டு வருகிறார்கள். இவர்கள் தற்போது, பெங்களூர் தேசிய கிரிக்கெட் அகடமியில் தங்கி சிகிச்சை பெற்று வருகிறார்கள். 

இவர்கள் குறித்த, மருத்துவ அறிக்கை வெளியாகியுள்ளது. கே.எல்.ராகுலின் காயம் குணமடைய அதிக நாட்கள் ஆகும் என்பதால், அவரது இடத்திற்கு சர்பரஸ் கான் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ராகுலும் சேர்க்கப்பட்டுள்ளார். 

ஆனால், இன்னமும் இடம் உறுதியாகவில்லை. ரவீந்திர ஜடேஜா காயம் விரைவில் குணமடையும் எனக் கூறப்பட்டிருப்பதால், தற்போதைக்கு பட்டியலில் இடம் பெற்றுள்ளார். இன்னமும் இவரது பெயர் முழுமையாக உறுதியாகவில்லை.

அணி மீட்டிங்கின்போது, பும்ரா ஓய்வு கேட்டுள்ளார் என கேப்டன் ரோஹித் சர்மா கூறிய நிலையில், அதற்கு பதில் அளித்த அஜித் அகார்கர், ''2ஆவது டெஸ்டுக்கும், மூன்றாவது டெஸ்டுக்கும் இடையில் 10 நாட்கள் இடைவேளை இருக்கிறது. 

இந்த ஓய்வு அவருக்கு போதும். தற்போது, நல்ல பார்மில் இருக்கிறார். அவர் இல்லையென்றால், பெரும் பின்னடைவு ஏற்படும். பும்ரா நிச்சயம் தேவை. அவரை நிச்சயம் தேர்வு செய்வேன்'' என அகார்கர் உறுதியாக தெரிவித்தார். அதன்படியே பும்ராவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

மற்றபடி அணியில் பெரிய மாற்றமில்லை. ஷ்ரேயஸ் ஐயர் காயம் காரணமாக விலகினார். பும்ரா, சிராஜ் ஆகியோர் ரெகுலர் வேகப்பந்து வீச்சாளர்களாக விளையாடுவது உறுதி. ஆகாஷ் தீப், முகேஷ் குமார் ஆகியோரும் பேக்கப் வேகப்பந்து வீச்சாளர்களாக இருக்கிறார்கள். அஸ்வின், அக்சர் படேல், ரவிச்சந்திரன் அஸ்வின், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் வேகப்பந்து வீச்சாளர்களாக இருக்கிறார்கள்.

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp