நம்பர் 1 வாய்ப்பை தவறவிட்ட விராட் கோலி! முந்திய ரோஹித் சர்மா!
உலகக்கோப்பை தொடரில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் தென்னாப்பிரிக்காவின் க்விண்டன் டி காக் 431 ரன்களுடன் முதல் இடத்தில் இருக்கிறார்.
விராட் கோலி இந்த உலகக்கோப்பை தொடரில் நல்ல ஃபார்மில் இருக்கிறார். ஐந்து போட்டிகளில் ஒரு சதம், மூன்று அரைசதம் அடித்து இருந்தார். இந்த நிலையில், ஆறாவதாக இங்கிலாந்து அணிக்கு எதிராக அவர் ஆடினார்.
தற்போதைய உலகக்கோப்பை தொடரில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் தென்னாப்பிரிக்காவின் க்விண்டன் டி காக் 431 ரன்களுடன் முதல் இடத்தில் இருக்கிறார்.
அவரை முந்தி இந்த பட்டியலில் முதல் இடத்தை பிடிக்க விராட் கோலிக்கு 78 ரன்கள் தேவைப்பட்டது. அவர் நல்ல ஃபார்மிலும் இருப்பதால் அதை எளிதாக செய்து காட்டுவார் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.
ஆனால், இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் கோலி டக் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார். அதனால், தற்போது ஆறு போட்டிகளின் முடிவில் அவர் 354 ரன்கள் மட்டுமே எடுத்து இருக்கிறார். உலகக்கோப்பையில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் ஆறாவது இடத்தில் இருக்கிறார்.
ஆனால், இதே போட்டியில் ரோஹித் சர்மா 87 ரன்கள் குவித்தார். அவர் இதன் மூலம் ஆறு போட்டிகளில் 398 ரன்கள் குவித்து இருக்கிறார். அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் நான்காவது இடத்தில் இருக்கிறார்.
இந்தியாவின் கடைசி மூன்று லீக் போட்டிகளில் விராட் கோலி அல்லது ரோஹித் சர்மா இந்த பட்டியலில் முதல் இடத்தை பெறுவார்களா? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
அதே சமயம், க்விண்டன் டி காக், டேவிட் வார்னர், ரச்சின் ரவீந்திரா போன்ற வீரர்கள் தங்களின் உச்சகட்ட ஃபார்மில் இருக்கிறார்கள். அவர்களை முந்துவது கடினமான ஒன்றுதான்.
2023 உலகக்கோப்பை தொடரில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் முதல் இடத்தில் க்விண்டன் டி காக் 431 ரன்கள் எடுத்தும், இரண்டாவது இடத்தில் ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர் 413 ரன்கள் எடுத்தும், மூன்றாவது இடத்தில் நியூசிலாந்து அணியின் இளம் வீரர் ரச்சின் ரவிந்திரா 406 ரன்கள் எடுத்தும் இடம் பெற்றுள்ளனர்.