ஒருநாள் தொடர்.. கவுதம் கம்பீர் எதிர்கொள்ளும் சவால்கள்? ரோஹித், கோலி ரன் குவிப்பார்களா?
இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று மதியம் 1.30 மணி அளவில் நாக்பூர் மைதானத்தில் தொடங்க உள்ளது.

இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடர் இன்று தொடங்கும் நிலையில், இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீருக்கு சில சவால்கள் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்து மோசமாக விளையாடி வரும் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மாவை குறிப்பாக கவுதம் கம்பீர் எப்படி கையாள போகிறார் என்பது முக்கிய கேள்வியாக உள்ளது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் மிக மோசமாக விளையாடிய விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா இருவரும் உள்ளூர் போட்டி தொடரான ரஞ்சி கோப்பையிலும் ரன்களை குவிக்கவில்லை.
2023 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் விராட் கோலி 765 ரன்களும், ரோஹித் சர்மா 597 ரன்களும் குவித்த நிலையில், பின்னர் நடைபெற்ற இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் ரோஹித் சர்மா 2 அரை சதம் அடித்த போதும், விராட் கோலி பெரிதாக ரன்கள் அடிக்கவில்லை.
இந்த நிலையில், வரும் 19ஆம் தேதி சாம்பியன்ஸ் கோப்பை தொடர் தொடங்க உள்ளதுடன், அதற்கு முன்னதாக இந்திய அணி இங்கிலாந்து அணிக்கு எதிராக விளையாட உள்ளது.
இன்று தொடங்கும் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் ரோஹித் சர்மாவும், விராட் கோலியும் எவ்வாறு செயற்படுவார்கள் என்பது தொடர்பில் கேள்வி எழுந்துள்ளது.
அத்துடன், ஒரு நாள் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியை பார்க்கும்போது திருப்திகரமாக இருப்பதாக தெரிவிக்கும் விமர்சகர்கள், விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா இருவரும் கம்பேக் கொடுப்பதற்கு கவுதம் கம்பீர் எந்த வகையில் துணையாக இருப்பார் என்பது அவருக்கு சவாலாக இருக்கும் என கூறியுள்ளனர்.
இதேவேளை, நீண்ட நாட்களாக விளையாடாமல் இருந்த முகமது ஷமி இங்கிலாந்து அணிக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் சிறப்பாக பந்து வீசியதுடன, முதுகு வலி காரணமாக நட்சத்திர பவுலரான ஜஸ்பிரீத் பும்ரா இந்த தொடரில் இடம் பெறவில்லை.
அத்துடன், 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் விக்கெட்டுகளை அள்ளிக் குவித்துவரும் வருண் சக்கரவர்த்தி இந்த ஒருநாள் தொடரில் இடம் பெற்றுள்ளதால் அவர் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இதயும் படிங்க: ஒருநாள் போட்டிகளிலிருந்து ரோகித் சர்மா ஓய்வை அறிவிக்கிறாரா? பிசிசிஐ வெளியிட்ட தகவல்!
இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று மதியம் 1.30 மணி அளவில் நாக்பூர் மைதானத்தில் தொடங்க உள்ளது.
இந்தியா அணி வீரர்கள் விவரம்
ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில் (துணை கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல் (விக்கெட் கீப்பர்), ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், அக்சர் படேல், குல்தீப் யாதவ், ஹர்ஷித் ரனா. ஷமி, அர்ஷ்தீப் சிங், வருண் சக்ரவர்த்தி.
இங்கிலாந்து அணி வீரர்கள் விவரம்
ஜோஸ் பட்லர் (கேப்டன்), ஹாரி புரூக், பென் டக்கெட், ஜோ ரூட், பிலிப் சால்ட், ஜேமி ஸ்மித், ஜேக்கப் பெத்தேல், பிரைடன் கார்ஸ், லியாம் லிவிங்ஸ்டோன், ஜேமி ஓவர்டன், ஜோஃப்ரா ஆர்ச்சர், கஸ் அட்கின்சன், சாகிப் மஹ்மூத், அடில் ரஷித், மார்க் வுட்.