ஆடியே ஆகணும்..ரோஹித் எடுத்த முடிவு.. மெகா திட்டம் போட்டுள்ள இந்திய அணி!

இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் அஸ்வின் விளையாட உள்ளதாக இந்திய அணி வட்டாரத்தில் இருந்து தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஆடியே ஆகணும்..ரோஹித் எடுத்த முடிவு.. மெகா திட்டம் போட்டுள்ள இந்திய அணி!

இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் அஸ்வின் விளையாட உள்ளதாக இந்திய அணி வட்டாரத்தில் இருந்து தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோத உள்ள லக்னோ ஆடுகளம் ஸ்பின் பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும். அதே சமயம் பேட்டிங் செய்யவும் ஏற்றதாக இருக்கும். 

அதனால், கேப்டன் ரோஹித் சர்மா அஸ்வினை இந்தப் போட்டியில் களமிறக்குவதில் ஆர்வமாக இருக்கிறார். அஸ்வின் தன் அனுபவ பந்துவீச்சால் இங்கிலாந்து பேட்ஸ்மேன்களுக்கு அழுத்தம் கொடுப்பார். 

அதே சமயம், பேட்டிங்கிலும் ஓரளவு கை கொடுப்பார். அதனால் தான் அஸ்வினை அணியில் சேர்க்க திட்டமிட்டு இருக்கிறார் ரோஹித் சர்மா. இந்த உலகக்கோப்பை தொடரில் சென்னையில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் மட்டுமே அஸ்வின் ஆடி இருந்தார். 

அந்தப் போட்டிக்கான பிட்ச் ஸ்பின் பந்துவீச்சுக்கு சாதகமாக இருந்ததால் அப்போது அந்த முடிவு எடுக்கப்பட்டது. அண்ட் திட்டம் வெற்றியும் பெற்றது. இந்தியா, ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது. அதே திட்டத்தை லக்னோ ஆடுகளத்திலும் செயல்படுத்த உள்ளது இந்திய அணி.

உடைக்கவே முடியாத சேவாக்கின் சாதனையை தரைமட்டமாக்கிய ரியான் பராக்

ஹர்திக் பாண்டியா இல்லாத நிலையில், அஸ்வினை அணியில் சேர்ப்பதில் சிக்கல் உள்ளது. பாண்டியா ஆறாவது இடத்தில் பேட்டிங் இறங்குவார். அதை ஈடுகட்ட சூர்யகுமார் யாதவ் அணியில் சேர்க்கப்பட வேண்டும். இந்த மாற்றத்தை செய்தால் சரியாக ஐந்து பந்துவீச்சாளர்களை மட்டுமே அணியில் சேர்க்க முடியும்.

இந்த நிலையில், அஸ்வினையும் சேர்த்து மூன்று சுழற் பந்துவீச்சாளர்களை ஆட வைத்தால், இரண்டு வேகப் பந்துவீச்சாளர்களை மட்டுமே ஆட வைக்க முடியும். அதன்படி, அஸ்வின், ஜடேஜா, குல்தீப் யாதவ், பும்ரா மற்றும் முகமது ஷமி இந்தப் போட்டியில் இடம் பெற வாய்ப்பு உள்ளது.

இந்தியா - இங்கிலாந்து போட்டி நடைபெற உள்ள பிட்ச் ஸ்பின் பந்துவீச்சுக்கு நிச்சயம் ஒத்துழைக்கும் என இந்தியா தீவிரமாக நம்ப மற்றொரு காரணமும் உள்ளது. பயிற்சியாளர் ராகுல் டிராவிட் அந்த பிட்ச்சை இந்தியாவுக்கு சாதகமாக மாற்ற முயன்றதாக ஒரு சர்ச்சை எழுந்துள்ளது. 

அப்படி பிட்ச் ஸ்பின் பந்துவீச்சுக்கு சாதகமாக மாற்றியதாலேயே அஸ்வினை ஆட வைப்பதில் ரோஹித் சர்மா உறுதியாக இருக்கிறார்.

நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள Colomboதமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


NEWS21
Colomboதமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
Colomboதமிழ் Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...