ரோஹித் சர்மா இப்படியா பண்றது? டென்ஷன் ஆன ரித்திகா.. என்ன நடந்தது?
ஒட்டுமொத்த அழுத்தமும் கேப்டன் ரோஹித் சர்மா மீது விழுந்தது. கே எல் ராகுல் ஒருபுறம் நிதான ஆட்டம் ஆட 15 ஓவரின் முடிவில் அணியின் ஸ்கோர் உயராமல் இருந்தது.
இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியின் போது ரோஹித் சர்மா ஒரு நிமிடம் தடுமாறி விக்கெட்டை இழக்கப் பார்த்தார். அம்பயர் அவுட்டும் கொடுத்து விட்டார். அப்போது போட்டியைக் காண வந்திருந்த அவரது மனைவி அதைக் கண்டு பதற்றம் அடைந்தார். அந்த காட்சி நேரலையில் ஒளிபரப்பானது.
இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையே ஆன உலகக்கோப்பை லீக் போட்டியில் ஒரு கட்டத்தில் இந்தியா 40 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்து தடுமாறியது.
சுப்மன் கில் 9 ரன்கள் மட்டுமே எடுத்து நடையைக் காட்டினார். அதிக எதிர்பார்ப்புக்கு நடுவே ஆட வந்த விராட் கோலி டக் அவுட் ஆனார். அடுத்து வந்த ஸ்ரேயாஸ் ஐயர் மோசமான ஷாட் ஆடி 4 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அதனால், ஒட்டுமொத்த அழுத்தமும் கேப்டன் ரோஹித் சர்மா மீது விழுந்தது. கே எல் ராகுல் ஒருபுறம் நிதான ஆட்டம் ஆட 15 ஓவரின் முடிவில் அணியின் ஸ்கோர் உயராமல் இருந்தது. அப்போது இந்தியா 50 ரன்கள் மட்டுமே எடுத்து இருந்தது.
அதனால், கடும் அழுத்தத்தில் ரோஹித் சர்மா ஆடிய நிலையில் இங்கிலாந்து வேகப் பந்துவீச்சாளர் மார்க் வுட் வீசிய 16வது ஓவரின் ஐந்தாவது பந்தை ரோஹித் சர்மா சரியாக கணிக்கவில்லை. பந்து அவரது காலில் பட்டது. அம்பயர் எல்பிடபுள்யூ என அவுட் கொடுத்து விட்டார். அப்போது ரோஹித் 33 ரன்கள் தான் எடுத்து இருந்தார்.
அதனால், அப்போது மைதானத்தில் மொத்த ரசிகர்களும் உறைந்து போனார்கள். ரோஹித் சர்மாவின் மனைவி ரித்திகா சஜ்தே போட்டியை காண வந்திருந்த நிலையில் அவரும் பதற்றம் அடைந்தார். ஆனால், ரோஹித் சர்மா டிஆர்எஸ் ரிவ்யூ கேட்டதால் முடிவு என்ன ஆகுமோ என அந்த பதற்றம் நீடித்தது. பின் ரிவ்யூவில் பந்து ஸ்டம்ப்பில் படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டது.
இதை அடுத்து அம்பயர் முடிவை மாற்றிக் கொண்டார். அப்போது மொத்த மைதானமும் ஆர்ப்பரித்தது. ரித்திகா சஜ்தே மகிழ்ச்சியின் உச்சத்தில் இருந்தார். பின் ரோஹித் சர்மா அரைசதம் கடந்து 87 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இந்தியா 229 ரன்கள் குவித்த நிலையில், ரோஹித் மட்டுமே அதில் அரைசதம் அடித்து இருந்தார்.