எந்த அணியாலும் செய்ய முடியாததை செய்த இந்திய அணி... கிரிக்கெட் வரலாற்றில் சாதனை!

இங்கிலாந்து அணி உடனான  ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி மிகப்பெரும் சாதனை ஒன்றை செய்து உள்ளது.

எந்த அணியாலும் செய்ய முடியாததை செய்த இந்திய அணி... கிரிக்கெட் வரலாற்றில் சாதனை!

இங்கிலாந்து அணி உடனான  ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி மிகப்பெரும் சாதனை ஒன்றை செய்து உள்ளது.

இங்கிலாந்து அணியுடனான இந்த தொடரில் நான்கு போட்டிகளின் முடிவில் 3 -1 என இந்திய அணி தொடரைக் கைப்பற்றி இருந்தது. 

ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 218 ரன்களுக்கு ஆல் - அவுட் ஆனது.

அடுத்து பேட்டிங் ஆடிய இந்திய அணியில் ஜெய்ஸ்வால் 57, ரோஹித் சர்மா 103, சுப்மன் கில் 110 ரன்கள் குவித்தனர். 

ஒரே டெஸ்ட் இன்னிங்ஸில் ஒரு அணியின் முதல் மூன்று பேட்ஸ்மேன்களும் தலா 3 சிக்ஸ் அல்லது அதற்கும் மேல் அடிப்பது இதுவே முதல் முறையாகும்.

1877இல் முதல் டெஸ்ட் போட்டி நடந்தது முதல் இதுவரை எந்தப் போட்டியிலும் இந்த சாதனை நடைபெறவில்லை.

இங்கிலாந்து அணியின் அதிரடி ஆட்டம் ஆடும் உத்திக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய அணியும் அதிரடியாக ரன் குவித்து வருகின்றது.

இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 3 விக்கெட்கள் இழந்து இருந்த போது 279 ரன்கள் குவித்து இருந்தது. இங்கிலாந்து அணி ஐந்தாவது டெஸ்ட்டில் வெல்வது கடினமாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp