இந்திய டெஸ்ட் அணி அறிவிக்கப்பட்டது.... அணிக்கு திரும்பிய முக்கிய வீரர்... முழு விவரம் இதோ!

இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய டெஸ்ட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்திய டெஸ்ட் அணி அறிவிக்கப்பட்டது.... அணிக்கு திரும்பிய முக்கிய வீரர்... முழு விவரம் இதோ!

இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய டெஸ்ட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்திய மண்ணில் நடக்கும் டெஸ்ட் போட்டிகளில் சுழற் பந்துவீச்சுக்கு அதிக முக்கியத்துவம் இருக்கும் என்பதால் நான்கு சுழற் பந்துவீச்சாளர்கள் தேர்வு செய்யப்பட்டு இருக்கின்றனர்.

நீண்ட இடைவெளிக்கு பின் ஆல் - ரவுண்டர் அக்சர் படேல் இந்திய டெஸ்ட் அணியில் இடம் பெற்று இருக்கிறார். ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் சுழற் பந்துவீச்சாளர்களாக அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

தென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடருக்கு முன் தாமாக அணியில் இருந்து விலகிய இஷான் கிஷனுக்கு டெஸ்ட் அணியில் இடம் அளிக்கப்படவில்லை.

ரோஹித் சர்மாவை சீண்டிய இளம் வீரர்.. டிராவிட் செய்த காரியம்... உலகக்கோப்பை வாய்ப்பு அவ்வளவுதான்!

விக்கெட் கீப்பராக கே எல் ராகுலும் மாற்று விக்கெட் கீப்பர்களாக கே எஸ் பாரத் மற்றும் துருவ ஜுரேல் என இரண்டு வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு இருக்கின்றனர். 

வேகப் பந்துவீச்சாளர்களாக பும்ரா, முகமது சிராஜ், முகேஷ் குமார் மற்றும் ஆவேஷ் கான் உள்ளனர். பேட்டிங்கில் ரோஹித் சர்மா, ஜெய்ஸ்வால், சுப்மன் கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர் இடம் பெற்றுள்ளனர். 

இந்திய அணி விவரம்

ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், யாஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கே எல் ராகுல் (விக்கெட் கீப்பர்), கேஎஸ் பாரத் (விக்கெட் கீப்பர்), துருவ் ஜூரல் (விக்கெட் கீப்பர்), ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், முகமது. சிராஜ், முகேஷ் குமார், ஜஸ்பிரித் பும்ரா (துணை கேப்டன்), ஆவேஷ் கான்

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp