இந்தியா - பாகிஸ்தான் போட்டி தொடர்பில் புது அப்டேட் - 2 முறை மோதல்..!

ஏற்கனவே, இந்தியாவின் நிலைப்பாட்டை சீக்கிரம் தெரிவிக்குமாறு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஐசிசியிடம் கேட்டுக் கொண்டிருந்தது. 

இந்தியா - பாகிஸ்தான் போட்டி தொடர்பில் புது அப்டேட் -  2 முறை மோதல்..!

சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடரை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நடத்துகிறது. டாப் 8 அணிகள் இந்த தொடரில் பங்கேற்க இருக்கும் நிலையில், இந்தியாவைத் தவிர மற்ற அணிகள் அனைத்தும் பாகிஸ்தான் சென்று விளையாட ஒப்புக்கொண்டுள்ளன. 

இந்தியா மட்டும் மவுனம் காத்து வருகிறது. ஏற்கனவே, இந்தியாவின் நிலைப்பாட்டை சீக்கிரம் தெரிவிக்குமாறு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஐசிசியிடம் கேட்டுக் கொண்டிருந்தது. 

அத்துடன் இந்த விவகாரத்தில் ஐசிசியே இறுதி முடிவெடுக்கட்டும் என்றும், எக்காரணத்தைக் கொண்டு பாகிஸ்தானை தவிர வெளிநாடுகளில் இப்போட்டியை நடத்த அனுமதிக்கமாட்டோம், ஹைபிரிட் மாடலுக்கும் ஒத்துழைக்க மாட்டோம் என்றும் தெரிவித்துள்ளது.

இதனால் இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பங்கேற்குமா என்பது இதுவரை சஸ்பென்ஸாகவே இருக்கிறது. 

அண்மையில் நடைபெற்ற ஐசிசி கூட்டத்தில் கூட்டத்தில் கூட இந்தியா சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பங்கேற்பது குறித்து விவாதிக்கப்படவில்லை.  அத்துடன் இந்த தொடரை நடத்துவதற்காக மொத்தம் 70 மில்லியன் அமெரிக்க டாலரை ஒதுக்கியிருக்கும் ஐசிசி கூடுதல் செலவுகளுக்காக 4.5 மில்லியன் அமெரிக்க டாலர்களையும் ஒதுக்கியிருக்கிறது. 

ஒருவேளை ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி ஹைபிரிட் மாடலில் நடைபெற்றால், ஐசிசி ஒதுக்கியிருக்கும் இந்த தொகை நிச்சயம் பத்தாது. இந்தியா மட்டுமே ஹைபிரிட் மாடல் கேட்டுக் கொண்டிருப்பதால் அதற்கு செலவாகும் மொத்த தொகையும் பிசிசிஐ ஏற்கவும் வாய்ப்பு இருக்கிறது. 

இருப்பினும் இதுகுறித்து எந்த இறுதி முடிவும் எடுக்கப்படவில்லை. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமும் இந்தியா சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்பது குறித்த எந்த விஷயத்தையும் பொதுவெளியில் பேசக்கூடாது என அந்நாட்டு நிர்வாகிகளைக் கேட்டுக் கொண்டுள்ளது. 

இப்போது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் உருவாக்கியிருக்கும் சாம்பியன்ஸ் டிராபி உத்தேச அட்டவணைப் பட்டியலின்படி, இந்தியா அனைத்து போட்டிகளையும் லாகூரில் மட்டுமே விளையாடும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. 

மேலும், இரு அணிகளும் ஒரே பிரிவில் இடம்பெற்றிருக்கின்றன. அதனால், லீக் மற்றும் இறுதிப் போட்டி என இரண்டு முறை இந்த தொடரில் மோத வாய்ப்பு இருக்கிறது. 

ஆனால், இந்திய கிரிக்கெட் வாரியத்தின் முடிவின் அடிப்படையிலேயே சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் அட்டவணைகள் உறுதியாகும். ஒருவேளை இந்தியா பங்கேற்காவிட்டால், இலங்கை அணி கலந்து கொள்ளவும் வாய்ப்பு இருக்கிறது.

நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள Colomboதமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


NEWS21
Colomboதமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
Colomboதமிழ் Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...