வெறும் 6 சிக்சர் அடித்தால் போதும்... இரண்டு முக்கிய சாதனையை படைக்க சூர்யகுமாருக்கு வாய்ப்பு!
இந்தியா மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையிலான 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி இந்திய நேரப்படி டர்பன் நகரில் வெள்ளிக்கிழமை இரவு 8.30 மணிக்கு ஆரம்பிக்கவுள்ளது.
இந்தியா மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையிலான 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி இந்திய நேரப்படி டர்பன் நகரில் வெள்ளிக்கிழமை இரவு 8.30 மணிக்கு ஆரம்பிக்கவுள்ளது.
இரண்டாவது டி20 போட்டி நவம்பர் 10ஆம் தேதியும், மூன்றாவது டி20 போட்டி நவம்பர் 13ஆம் தேதியும், நான்காவது டி20 போட்டி நவம்பர் 15ஆம் தேதியும் நடக்கவுள்ளது.
இந்த நிலையில், கோலி, ரோஹித்து உள்ளிட்ட வீரர்கள் இல்லாத நிலையில், இந்த போட்டியில் சூரிய குமார் யாதவ், தலைமையில் ஹர்திக் பாண்டியா,சஞ்சு சாம்சன்,அபிஷேக் ஷர்மா, ரிங்கு சிங், ஆர்ஸ்தீத் சிங், அக்சர் பட்டேல் உள்ளிட்ட இளம் வீரர்கள் களமிறங்க உள்ளனர்.
2021 ஆம் ஆண்டு சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அறிமுகமான சூரியகுமார் யாதவ், இதுவரை 74 சர்வதேச டி20 போட்டிகள் விளையாடி 2544 ரன்கள் அடித்திருக்கிறார்.
34 வயதான சூரிய குமார் யாதவ், இதுவரை நான்கு சதம் மற்றும் 21 அரை சதம் என சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அடித்து இருக்கிறார். அவருடைய ஸ்ட்ரைக் ரேட் 169.48 என்பதுடன், டி20 கிரிக்கெட்டில் 42 என்ற அளவில் அவருடைய சராசரி உள்ளது.
ரோகித், கோலி இல்லை... ஒரே இடத்துக்கு போட்டியிடும் 3 வீரர்கள்.. குழப்பத்தில் சூரியகுமார்!
அண்மையில் இலங்கை மற்றும் வங்கதேசத்துக்கு எதிரான டி20 தொடர்களை சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி கைப்பற்றி உள்ளதுடன், வங்கதேசத்துக்கு எதிரான மூன்று இன்னிங்க்ஸில் சூரியகுமார் யாதவ் 112 ரன்கள் அடித்து இருந்தார்.
இந்த நிலையில் சூரியகுமார் யாதவ் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான நான்கு டி20 போட்டிகளில் மொத்தமாக 107 ரன்கள் அடித்தால் ஒரு சாதனையை படைப்பார். தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக ஏழு சர்வதேச டி20 போட்டிகள் விளையாடி 346 ரன்கள் அடித்துள்ள சூரியகுமார் யாதவ்வின் ஸ்ட்ரைக் ரேட் 175 ஆகும்.
ஒரு சதம், நான்கு அரை சதம் என தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக சூரியகுமார் அடித்துள்ளதுடன், தற்போது இரு அணிகளுக்கும் இடையே அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் டேவிட் மில்லர் 452 ரன்கள் உடன் முதலிடத்தில் இருக்கிறார்.
இதனையடுத்து, சூரியகுமார் யாதவ் 107 ரன்கள் அடித்தால் அவர் முதலிடத்துக்கு செல்ல வாய்ப்பு உள்ளதுடன், இந்த தொடரில் 6 சிக்ஸர்கள் வரை அடித்தால், சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிவேகமாக 150 சிக்சர் அடித்த வீரர் என்ற பெருமையை சூரியகுமார் தனதாக்குவார்.