தொடரை வெல்லுமா இந்திய அணி.. எதிர்பார்ப்புமிக்க போட்டி இன்று... பிளேயிங் லெவன் எப்படி?

இன்றைய போட்டி தொடரின் வெற்றியை தீர்மானிக்கும் என்பதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. 

தொடரை வெல்லுமா இந்திய அணி.. எதிர்பார்ப்புமிக்க போட்டி இன்று... பிளேயிங் லெவன் எப்படி?

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று நடக்கவுள்ளது. ஐபிஎல் ஏலத்தின் போது இரண்டாவது ஒருநாள் போட்டி நடைபெற்றதால் ரசிகர்கள் மத்தியில் கவனத்தை பெறவில்லை.

ஆனால், இன்றைய போட்டி தொடரின் வெற்றியை தீர்மானிக்கும் என்பதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. 

விராட் கோலி, ரோஹித் சர்மா, முகமது சமி போன்ற முக்கிய வீரர்கள் இல்லாமலேயே இளம் படை தென்னாப்பிரிக்க மண்ணில் தொடரை கைப்பற்றினால் அது இந்திய அணிக்கு புதிய உத்வேகத்தை கொடுக்கும். 

பார்ல் மைதானம் சுழற் பந்துவீச்சுக்கு சாதகமானது என்பதால், இந்தியாவுக்கு இது வாய்ப்பாக பார்க்கப்படுகிறது. இந்திய அணியில் ருதுராஜ் தொடர்ந்து மோசமாக விளையாடி வருவதால் இன்றைய ஆட்டம் அவருக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. 

அத்துடன், சாய் சுதர்சன் தொடர்ந்து இரண்டு போட்டியில் அரைசதம் அடித்துள்ள நிலையில் ஹாட்ரிக் அரை சதத்தை அவர் பதிவு செய்வாரா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. திலக் வர்மா மீண்டும் அதே போல் ஒரு பெரிய இன்னிங்ஸை ஆடவில்லை. இதனால் அவர் மீதும் நெருக்கடி ஏற்பட்டு இருக்கிறது. 

சஞ்சு சாம்சன் இன்றைய ஆட்டத்தில் நடுவரிசையில் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டாவது போட்டியில் ரிங்கு சிங் பேட்டிங்கில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. 

இந்த நிலையில் ரஜத் பட்டிதாருக்கு ஒரு போட்டியிலாவது வாய்ப்பு வழங்க வேண்டும் என அணி நிர்வாகம் முடிவு எடுத்திருப்பதாக தெரிகிறது. இதனால் ரிங்கு சிங் அல்லது திலக் வர்மாவுக்கு பதிலாக ரஜத் பட்டிதாருக்கு இன்றைய ஆட்டத்தில் வாய்ப்பு கிடைத்தாலும் கிடைக்கலாம். வேகப்பந்துவீச்சை பொறுத்தவரை அணியில் எந்த மாற்றமும் இருக்காது என்று கூறப்படுகின்றது.

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp