இந்திய வீரர்களுக்கு சிக்கல்.. கண்டிப்பா 300 ரன் தாண்டலாம்.. ஆனா ஒரு ட்விஸ்ட்

கொல்கத்தாவில் 300 ரன் எடுக்கலாம் என்றாலும், அந்த பிட்ச்சில் மற்றொரு சிக்கல் உள்ளது. அந்த பிட்ச் வேகப் பந்துவீச்சாளர்களுக்கு அதிகம் ஒத்துழைக்கும். பந்து அதிகம் பவுன்ஸ் ஆகும். 

இந்திய வீரர்களுக்கு சிக்கல்.. கண்டிப்பா 300 ரன் தாண்டலாம்.. ஆனா ஒரு ட்விஸ்ட்

கொல்கத்தா பிட்ச்சில் 300 ரன்கள் அடிக்க முடியும் என கூறப்படும் நிலையில், அங்கே வேகப் பந்துவீச்சுக்கும் பிட்ச் ஒத்துழைக்கும். அதிக பவுன்ஸ் ஆகும் என்பதால் தென்னாப்பிரிக்க வேகப் பந்துவீச்சை இந்திய வீரர்கள் சமாளிக்க வேண்டும்.

இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் உலகக்கோப்பை லீக் போட்டி நடைபெற உள்ள கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் 2023 உலகக்கோப்பையில் இதுவரை நடந்த இரண்டு போட்டிகளில் சராசரியாக 215 ரன்களே ஒரு இன்னிங்க்ஸில் அடிக்கப்பட்டு இருக்கிறது.

ஆனால், அந்த இரண்டு போட்டிகளுமே பங்களாதேஷ் அணி ஆடிய போட்டிகள். அந்த அணி சராசரியாக ஆடி வருவதால் தான் இத்தனை குறைந்த ஸ்கோர் அடிக்கப்பட்டு இருக்கிறது. 

மற்றபடி, கொல்கத்தா பிட்ச் 300 ரன்கள் அடிக்கக் கூடிய பிட்ச் என அந்த மைதானத்தின் பிட்ச் பராமரிப்பு பொறுப்பு அதிகாரி சுஜன் முகர்ஜி ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார்.

மேலும், பிட்ச்சை இந்திய அணி பயிற்சியாளர் ராகுல் டிராவிட் நேரில் சென்று பார்வையிட்டார். அப்போது அவருக்கு காண்பிக்கப்பட்ட பிட்ச்சில் அவருக்கு முழு திருப்தி ஏற்பட்டதாக சுஜன் முகர்ஜி கூறினார்.

கொல்கத்தாவில் 300 ரன் எடுக்கலாம் என்றாலும், அந்த பிட்ச்சில் மற்றொரு சிக்கல் உள்ளது. அந்த பிட்ச் வேகப் பந்துவீச்சாளர்களுக்கு அதிகம் ஒத்துழைக்கும். பந்து அதிகம் பவுன்ஸ் ஆகும். 

தென்னாப்பிரிக்கா அணி ஃபார்மில் இருக்கும் வேகப் பந்துவீச்சாளர்களை அணியில் வைத்துள்ளது. அவர்கள் இயல்பாகவே பவுன்ஸ் வீசக் கூடியவர்கள் என்பதால் அது மட்டுமே இந்திய வீரர்களுக்கு பெரிய சிக்கலாக இருக்கும். அதை சமாளித்தால் மட்டுமே இந்திய அணி 300 ரன்களை எட்ட முடியும்.

ஏமாற்றமாக இருக்கு.. இப்படி வெளியே போவோம்னு நினைச்சி கூட பார்க்கல.. வேதனையில் பட்லர்!

அதே சமயம் இந்திய அணியும் வேகப் பந்துவீச்சில் வலுவாக உள்ளது. ஆனாலும், இந்திய பந்துவீச்சாளர்கள் அதிக பவுன்ஸ் வீசுவது இல்லை. ஆனால், துல்லியமாக வீசுவார்கள். அது தென்னாப்பிரிக்க வீரர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

கொல்கத்தாவில் ஸ்பின் பந்துவீச்சு ஒரளவு மட்டுமே வேலை செய்யும் எனவும் கூறப்படுகிறது. பங்களாதேஷ் அணி ஆடிய இரண்டு போட்டிகளில் ஸ்பின் மற்றும் வேகப் பந்துவீச்சு என இரண்டுமே சரி சமமாகவே இருந்துள்ளது. 

ஆனால், அணியில் இரண்டு ஸ்பின்னர்கள் இருப்பது நல்லது. அந்த வகையில், தென்னாப்பிரிக்கா அணி எப்போதும் நான்கு வேகப் பந்துவீச்சாளர்களை பயன்படுத்தி வரும் நிலையில், அதை மாற்றி இந்தப் போட்டியில் இரண்டு ஸ்பின்னர்களை களமிறக்க வாய்ப்பு உள்ளது.

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp