இந்தியாவுக்கு அடிச்ச லக்.. டாஸில் தென்னாப்பிரிக்காவுக்கு செக் வைத்த ரோஹித்

இந்தியா முதலில் பேட்டிங் ஆடுவது சாதகமான முடிவாகும். கொல்கத்தா பிட்ச் நேரம் செல்ல செல்ல மெதுவான பிட்சாக மாறும் என முன்னாள் வீரர்கள் போட்டிக்கு முன் பிட்ச்சை பார்த்து கருத்து கூறி இருந்தனர். 

இந்தியாவுக்கு அடிச்ச லக்.. டாஸில் தென்னாப்பிரிக்காவுக்கு செக் வைத்த ரோஹித்

தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான உலகக்கோப்பை லீக் போட்டியில் டாஸ் முடிவில் இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா பேட்டிங் தேர்வு செய்து சவால் விடுத்துள்ளார்.

கொல்கத்தா ஆடுகளத்தில் இரவில் சேஸிங் செய்வது கடினம் என்பதால் தென்னாப்பிரிக்கா அணிக்கு டாஸ் தோல்வி கடினமான முடிவாக அமைந்தது.

இந்தியா முதலில் பேட்டிங் ஆடுவது சாதகமான முடிவாகும். கொல்கத்தா பிட்ச் நேரம் செல்ல செல்ல மெதுவான பிட்சாக மாறும் என முன்னாள் வீரர்கள் போட்டிக்கு முன் பிட்ச்சை பார்த்து கருத்து கூறி இருந்தனர். 

அந்த வகையில் இரண்டாம் பாதியில் பேட்டிங் செய்ய சற்று கடினமாக இருக்கலாம். அதனால், இந்தப் போட்டியில் இந்தியா டாஸ் வென்றது அதிர்ஷ்டம் தான்.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ரோஹித் பேட்டிங் தேர்வு செய்த நிலையில், இந்திய அணியில் எந்த மாற்றமும் இல்லை என அறிவித்தார். 
அதன்படி இந்திய அணி இந்தப் போட்டியில் மூன்று வேகப் பந்துவீச்சாளர்கள், இரண்டு சுழற் பந்துவீச்சாளர்களை பயன்படுத்த உள்ளது.

தென்னாப்பிரிக்கா அணியில் ஒரே ஒரு மாற்றமாக வேகப் பந்துவீச்சாளர் கோட்ஸி நீக்கப்பட்டு, சுழற் பந்துவீச்சாளர் தப்ரைஸ் ஷம்சி அணியில் சேர்க்கப்பட்டார். 

தென்னாப்பிரிக்காவும் இந்திய அணியைப் போல மூன்று வேகப் பந்துவீச்சாளர்கள், இரண்டு சுழற் பந்துவீச்சாளர்களை பயன்படுத்த உள்ளது.

இந்தியா பிளேயிங் 11

ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கே எல் ராகுல் (விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா, குல்தீப் யாதவ், முகமது சிராஜ்

தென்னாப்பிரிக்கா பிளேயிங் 11 

க்வின்டன் டி காக் (விக்கெட் கீப்பர்), டெம்பா பவுமா (கேப்டன்), ரஸ்ஸி வான் டெர் டுசென், எய்டன் மார்க்ரம், ஹென்ரிச் கிளாசென், டேவிட் மில்லர், மார்கோ ஜான்சன், கேசவ் மகாராஜ், தப்ரைஸ் ஷம்சி, ககிசோ ரபாடா, லுங்கி நிகிடி

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp