ரோகித், கோலி இல்லை... ஒரே இடத்துக்கு போட்டியிடும் 3 வீரர்கள்.. குழப்பத்தில் சூரியகுமார்!
இந்தியா மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி டர்பன் நகரில் வெள்ளிக்கிழமை இரவு ஆரம்பமாக உள்ளது.
இந்தியா மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி டர்பன் நகரில் வெள்ளிக்கிழமை இரவு ஆரம்பமாக உள்ளது.
ரோகித் சர்மா, விராட் கோலி உள்ளிட்ட நட்சத்திர வீரர்பன் ஓய்வு பெற்றுவிட்ட நிலையில், சூரிய குமார் யாதவ் தலைமையில் இந்திய அணி வீரர்கள் பங்கேற்கிறார்கள்.
முதல் முறையாக இளம் இந்திய அணி வெளிநாட்டுக்கு சென்று பெரிய தொடரில் விளையாடுகிறது. நியூசிலாந்துக்கு எதிராக சீனியர் வீரர்கள் டெஸ்ட் தொடரில் சொதப்பியதால் இழந்த மானத்தை இளம் அணியாவது காப்பாற்றுமா என்று ரசிகர்கள் எதிர்பார்த்து உள்ளனர்.
இந்தநிலையில், இந்திய அணியில் ஒரே இடத்திற்கு மூன்று பேர் போட்டி போடுவதால் யாருக்கு வாய்ப்பு தருவது என்ற குழப்பத்தில் சூரியகுமார் யாதவும் இருக்கின்றார்.
சஞ்சு சாம்சன், அபிஷேக் ஷர்மா, திலக் வர்மா, சூரியகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, ரிங்கு சிங், அக்சர் பட்டேல் ஆகிய ஏழு வீரர்கள் தங்களுடைய இடத்தை தக்கவைத்துள்ள நிலையில், வேக பந்துவீச்சாளராக ஆர்ஸ்தீப் சிங் மற்றும் யாஸ் தயால் உள்ளனர்.
இந்த நிலையில், எட்டாவது இடத்தில் யாரை விளையாட வைப்பது என்பதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. பொதுவாக இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களை வைத்து டி20 கிரிக்கெட்டில் இந்திய அணி விளையாடும்.
இதனால், எட்டாவது இடத்தில் ரவி பிஸ்னாய்க்கு வாய்ப்பு தருவதா இல்லை தமிழக கிரிக்கெட் வீரர் வருண் சக்கரவர்த்திக்கு வாய்ப்பு தருவதா என்ற குழப்பம் ஏற்பட்டு இருக்கிறது.
அத்துடன், தென்னாப்பிரிக்கா ஆடுகளத்தில் சுழற் பந்துவீச்சாளர்களை ஒருவேளை நொறுக்கி விட்டால் என்ன செய்வது என்ற சந்தேகமும் இருக்கிறது.
இதனையடுத்து, எட்டாவது இடத்தில் இரண்டு சுழற் பந்துவீச்சாளர்களையும் நீக்கிவிட்டு ஆல்ரவுண்டராக அணியில் இடம் பிடித்திருக்கும் ரமந்திப் சிங்குக்கு வாய்ப்பு கொடுக்கலாமா என்று ஆலோசிக்கப்பட்டுள்ளது.
தென்னாபிரிக்கா போன்ற ரன்குவிப்புக்கு சாதகமான ஆடுகளத்தில் பந்துவீச்சாளர்கள் அதிக அளவு இருப்பது நல்லது என்பதால், அக்சர்பட்டேல், ஹர்திக் பாண்டியாவை சேர்த்து ஐந்து பேர் அணியில் இருக்கிறார்கள்.
அத்துடன், தேவைப்பட்டால் திலக் வர்மா, அபிஷேக் ஷர்மா போன்ற வீரர்களும் பந்து வீச முடியும் என்பதால், ரமந்திப் சிங் போன்ற பேட்டிங் ஆல்ரவுண்டரை பயன்படுத்தி பேட்டிங் பலத்தை அதிகரிக்கலாமா என்ற குழப்பத்தில் சூரியகுமார் உள்ளார்.
இதேவேளை, ஜித்தேஷ் சர்மாவை விக்கெட் கீப்பராக பயன்படுத்திவிட்டு எட்டாவது வீரராக அக்சர் பட்டேலை களம் இருக்கலாம் என்ற நிலையும் இந்திய அணிக்கு உள்ளது.