இந்திய அணியால் 2ஆவது டெஸ்ட்டில் வெற்றி பெற முடியுமா? 2 முறை மட்டுமே நடந்த சம்பவம்!

ஆஸ்திரேலிய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் டிராவிஸ் ஹெட் 140 ரன்கள் எடுத்தார்.

இந்திய அணியால் 2ஆவது டெஸ்ட்டில் வெற்றி பெற முடியுமா? 2 முறை மட்டுமே நடந்த சம்பவம்!

ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாடி வருகிறது. இந்த சூழ்நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 157 ரன்கள் பின்தங்கியது. 

முதல் போட்டியில் இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் பிரம்மாண்ட வெற்றியை பெற்றது. அடுத்து அடிலெய்டில் நடந்து வரும் பகல் - இரவு டெஸ்ட் போட்டியில் இந்திய அணி பங்கேற்று உள்ளது. இந்த போட்டியில் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 180 ரன்கள் மட்டுமே எடுத்தது. 

அடுத்து ஆடிய ஆஸ்திரேலிய அணி 337 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் டிராவிஸ் ஹெட் 140 ரன்கள் எடுத்தார். இதை அடுத்து ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 157 ரன்கள் முன்னிலை பெற்றது. இது நல்ல முன்னிலை என்பதால் இந்தப் போட்டி ஆஸ்திரேலியாவுக்கு சாதகமாக உள்ளது.

இந்த சூழ்நிலையில் இந்திய அணையால் இந்தப் போட்டியில் வெற்றி பெற முடியுமா? என புள்ளி விவரத்தை பார்த்தபோது அது இந்திய அணிக்கு சாதகமாக இல்லை. இதுவரை நடந்த பகல் - இரவு டெஸ்ட் போட்டிகளில் ஒரு அணி முதல் இன்னிங்ஸில் பின்னடைவு பெற்ற பிறகும் போட்டியில் வென்ற நிகழ்வு இரண்டு முறை மட்டுமே நடந்துள்ளது.

2018 ஆம் ஆண்டு இலங்கை மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிய போட்டியில் இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் பின்னடைவை சந்தித்த போதும், ஐம்பது ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

அடுத்து 2020 ஆம் ஆண்டு இதே அடிலெய்டு மைதானத்தில் நடந்த இந்தியா - ஆஸ்திரேலியா டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 43 ரன்கள் முன்னிலை பெற்ற நிலையில் ஆஸ்திரேலிய அணி அந்த போட்டியில் 53 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

அந்தப் போட்டியில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 36 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது குறிப்பிடத்தக்கது. அதே மைதானத்தில் தான் இப்போது மீண்டும் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் பகல் - இரவு டெஸ்ட் போட்டியில் மோதி வருகின்றன. ஆனால், அப்போது இந்தியா 43 ரன்கள் மட்டுமே முன்னிலை பெற்று இருந்தது.

இப்போது ஆஸ்திரேலியா 157 ரன்கள் முன்னிலை பெற்று உள்ளது. இந்த சூழ்நிலையில் இந்திய அணி வெற்றி பெறுவது சற்று கடினமான விஷயம் தான். இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி 450 முதல் 500 ரன்கள் வரை எடுத்தால் சுமார் 300 ரன்கள் என்ற இலக்கை நிர்ணயித்து வெற்றி பெற வாய்ப்பு உள்ளது.

இதில் மற்றொரு சிக்கலும் உள்ளது. இந்த போட்டியின் ஐந்தாம் நாள் அன்று அடிலெய்டு மைதானத்தில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. எனவே, இந்திய அணி நான்கு நாட்களுக்குள் போட்டியை முடிக்க முயல வேண்டும். ஒருவேளை போட்டி ஆஸ்திரேலியாவுக்கு சாதகமாக செல்கிறது என்றால் இந்தியா போட்டியை டிரா செய்யவும் முயற்சி செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp