இதுவரை இப்படி நடந்ததே இல்லை.. வரலாறு படைக்க தயாராகும் பும்ரா மற்றும் கம்மின்ஸ்.. முழு விவரம் இதோ!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி இன்று  நடைபெற உள்ளதுடன், ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. 

இதுவரை இப்படி நடந்ததே இல்லை.. வரலாறு படைக்க தயாராகும் பும்ரா மற்றும் கம்மின்ஸ்.. முழு விவரம் இதோ!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி இன்று  நடைபெற உள்ளதுடன், ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. 

இரண்டு அணிகளுமே வலுவாக இருப்பதால் இந்தத் தொடர் மிகுந்த பரபரப்பை எட்டி உள்ள சூழ்நிலையில் இந்திய அணி கேப்டன் மற்றும் ஆஸ்திரேலியா அணி கேப்டன் இருவரும் ஒரு சிறப்பான சாதனையை படைக்க உள்ளனர்.

இந்தியா கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரில் விளையாட உள்ள நிலையில் முதல் டெஸ்ட் போட்டி பெர்த் மைதானத்தில் நடைபெற உள்ளது. 

காயத்தால் அவதிப்படும் இந்திய அணி... கடைசி நேரத்தில் நாடு திரும்பிய வீரர்... புறப்பட்டார் மாற்று வீரர்!

நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி தோல்வியடைந்ததால் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான வெற்றி மிக முக்கிய ஒன்றாக பார்க்கப்படுகிறது. மேலும், ஆஸ்திரேலியா அணியும் கடந்த இரண்டு முறை இந்திய அணிக்கு எதிரான தொடரில் சொந்த மண்ணில் இரு முறை தோல்வி அடைந்துள்ளதால் இந்த முறை இந்திய அணியை வீழ்த்த சிறப்பான முறையில் தயாராக உள்ளது. 

முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டனாக ரோகித் சர்மாவுக்கு பதிலாக துணை கேப்டன் பும்ரா கேப்டனாக பொறுப்பேற்று இருக்கிறார். ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக பாட் கம்மின்ஸ் செயல்படுகிறார்.

இந்த போட்டியில் இந்த இரண்டு அணி கேப்டன்களும் சிறப்பான சாதனையை படைக்கின்றனர். இந்திய அணியின் கேப்டன் பும்ரா மற்றும் ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் கம்மின்ஸ் ஆகியோர் இந்த டெஸ்ட் போட்டியில் முதல் வேகப்பந்து கேப்டன் ஜோடி என்ற வரலாற்றை படைக்கிறார்கள். 

இதற்கு முன்பு 1985-86ம் ஆண்டுகளில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக கபில்தேவ் இந்திய அணியின் கடைசி வேகப்பந்து வீச்சு கேப்டன் ஆவார். ஆனால் அப்போது ஆஸ்திரேலியா அணியில் வேகப்பந்துவீச்சாளர் கேப்டனாக இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே, இந்த டெஸ்ட் போட்டியில் வேகப்பந்துவீச்சாளர்கள் கேப்டனாக செயல்படும் போட்டியாக நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இரண்டு அணிகளுமே பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என்று இரண்டு துறைகளிலும் வலுவாக இருப்பதால் இந்த டெஸ்ட் தொடர் ரசிகர்களுக்கு சுவாரசியமாக இருக்கும்.

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp