நினைத்துக் கூட பார்க்க முடியாத சாதனை... இந்திய அணி செய்த வரலாற்று சம்பவம்!

இந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் இந்திய அணி 93 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 336 ரன்கள் சேர்த்துள்ளது. 

நினைத்துக் கூட பார்க்க முடியாத சாதனை... இந்திய அணி செய்த வரலாற்று சம்பவம்!

இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதிய இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விசித்திர பேட்டிங் சாதனை செய்யப்பட்டுள்ளது.

இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் துவக்க வீரர் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் மட்டுமே 179 ரன்கள் குவித்து களத்தில் இருக்கிறார். 

மற்ற பேட்ஸ்மேன்களில் ஒருவர் கூட 35 ரன்களை தாண்டவில்லை. சுப்மன் கில் 34, ஸ்ரேயாஸ் ஐயர் 27, ரஜத் படிதார் 32, அக்சர் பட்டேல் 27 ரன்கள் எடுத்து சரியாக 25 ரன்களுக்கு மேல், 35 ரன்களுக்குள் ரன் சேர்த்து ஆட்டமிழந்தனர்.

டெஸ்ட் வரலாற்றில், ஒரு இன்னிங்ஸில் பேட்டிங் வரிசையில், மூன்று, நான்கு, ஐந்து மற்றும் ஆறாம் வரிசையில் களமிறங்கிய பேட்ஸ்மேன்கள் சரியாக 25 ரன்கள் முதல் 35 ரன்களுக்குள் ஆட்டமிழந்தது இதுவே முதல் முறையாகும்.

இந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் இந்திய அணி 93 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 336 ரன்கள் சேர்த்துள்ளது. 

டெஸ்ட் கிரிக்கெட் ஆரம்பித்து 100 ஆண்டுகளுக்கும் மேல் ஆகும் நிலையில் எந்த ஒரு சர்வதேச டெஸ்ட் போட்டியிலும் இப்படி விசித்திரமான முறையில் சராசரி ரன்களை எடுத்து பேட்ஸ்மேன்கள் ஆட்டமிழந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

4 விக்கெட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், களத்தில் இருக்கும் ஜெய்ஸ்வாலை நம்பியே இந்திய அணி உள்ளது. அவர் விரைவாக ரன் குவித்தால் இந்திய அணி முதல் இன்னிங்க்ஸில் 400 - 450 ரன்களை தாண்ட வாய்ப்பு உள்ளதாக பார்க்கப்படுகின்றது.

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp