கனடாவுக்கு எதிரான இந்திய அணி... அந்த 3 வீரர்களுக்கு வாய்ப்பு தருவாரா ரோகித்?
அடுத்து சுற்றின் எல்லா போட்டிகளையும் இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் நாட்டில் விளையாட உள்ளது.
அமெரிக்காவின் புளோரிடா மைதானத்தில் கனடா அணிக்கு எதிராக இந்திய அணி விளையாட இருக்கிறது. சூப்பர் 8 சுற்றுக்கு இந்திய அணி தகுதி பெற்றதால் இந்தப் போட்டியில், இதுவரை விளையாடாத வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படுமா என கேள்வி எழுந்துள்ளது.
இந்திய அணி முதல் மூன்று போட்டிகளை அமெரிக்கா நியூயார்க் மைதானத்தில் விளையாடியது. இந்த மைதானத்தின் ஆடுகளம் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்த நிலையில், மூன்று பிரதான வேகப்பந்துவீச்சாளர்களை வைத்து ரோஹித் விளையாடினார்.
பேட்டிங் வரிசைக்கா குல்தீப் யாதவ் வெளியில் வைக்கப்பட்டார். இந்த நிலையில் அடுத்து சுற்றின் எல்லா போட்டிகளையும் இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் நாட்டில் விளையாட உள்ளது.
அங்கு நிச்சயம் குல்தீப் யாதவ் விளையாட வேண்டிய அவசியம் உள்ளதால் முகமது சிராஜ் வெளியில் வைக்கப்படலாம்.
எனவே, இந்திய அணி சூப்பர் 8 சுற்றுக்கு தயாராவதற்காக, வெஸ்ட் இண்டீஸ் ஆடுகளங்களில் விளையாடுவதற்கு வாய்ப்புள்ள வீரர்களுக்கு கனடா அணிக்கு எதிரான போட்டியில் விளையாட வாய்ப்பு தரும் என கூறப்படுகின்றது.
குல்தீப் யாதவ் கனடா அணிக்கு எதிரான போட்டியில் முகமது சிராஜ் இடத்தில் விளையாடலாம். ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல் இடத்தில் சாகலை விளையாட வைக்கவும் வாய்ப்பு இருக்கிறது.
இதேபோல், சிவம் துபேவுக்கு தற்காலிக ஓய்வு கொடுத்து, சாம்சனுக்கு ஒரு வாய்ப்பு தரப்படலாம். ஆனால் இதற்கான வாய்ப்பு குறைவுதான். மேலும் ஜெய்ஸ்வாலை விளையாட வைக்க வாய்ப்பு இல்லை.
இந்திய உத்தேச பிளேயிங் லெவன்
ரோஹித் சர்மா, விராட் கோலி, ரிஷப் பண்ட், சூரியகுமார் யாதவ், சிவம் துபே,ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல்,ரவீந்திர ஜடேஜா, அர்ஸ்தீப் சிங், குல்தீப் யாதவ், பும்ரா.